Monday, November 30, 2015

நகுலன்  வழிபட்ட நகுலேஸ்வரர் --கீழ தஞ்சை  


மற்ற  பெருமான்கள் மிகபெரிய  பாண  லிங்கமாக எழுந்தருளியிருக்க , இவர் மட்டுமே ஆவுடையாருடன்  கூடிய அழகிய லிங்கத்திருமேனியராய் விளங்குகிறார்.

அன்பர்களே....சிவ  பக்தியில்  சிறந்த  கோச்செங்கண்ணாயனார் சிவசபையினரை ,

































அவர்களது  பெருமுயற்சியை எவ்வளவு பாரட்டினாலும் தகும் .

அவர்கள்  தான் மேற்கூறிய  பஞ்ச  லிங்கதிருமேனிகளுக்கும்  சிறந்த முறையில்  மேற்கூரை  அமைந்துள்ளனர் .அவர்களது  அலைபேசி  எண்களை தந்துள்ளேன் .

கோச்செங்கண்ணாயனார் சிவசபை

[9444352848 , 9677226260]

Sunday, November 29, 2015

சகாதேவன்  வழிபட்ட சகாதேவேஸ்வரர் -கீழத்தஞ்சை --நாகை 































பஞ்ச  பாண்டவர்கள்  எங்கு  தங்கியிருந்தாலும்,  சிவ பூஜை  செய்வதை வழக்கமாக  கொண்டிருந்தனர் .

சிவ  வழிபாடு  செய்வதை  ஒருபோதும்  மறவாத சகாதேவன்  வழிபட்ட திருமேனி தான்  சகாதேவேஸ்வரர்.

இவரும்  மிகப்பெரிய திருமேனி ...கொண்டு  எழில் உருவமாக காட்சி தருகிறார்.

கோயில்  அர்ச்சகர் திரு ..ஸ்ரீனிவாச  ஐயர் 

தொடர்புக்கு: 94424  22582



அர்ஜுனன்  வழிபட்ட  அர்ஜுனேஸ்வரர்--கீழ தஞ்சை --நாகை 





















அன்பர்களே , அர்ஜுனன்  வழிபட்ட  அர்ஜுனேஸ்வரர்  அழகான நீண்ட பாணத்துடன், தேஜோமயமாக  காட்சி நல்குகிறார்......

பலகாலமாக  மண்ணில்  புதைந்திருந்த  லிங்கத்திருமேனிகள் .....ஆனால்  நேற்று  சிற்பிகள்  வடித்தனரோ?  என்று  என்னும்  அளவிற்கு  பளபளப்பான 
வடிவம்  கொண்டு  விளங்குகின்றனர்...

அன்பர்களே!!காண்பதற்கு  யார் யாரெல்லாம்  கொடுத்து வைத்துள்ளீர்கள் ?

கோயில்  அர்ச்சகர் திரு ..ஸ்ரீனிவாச  ஐயர் 

தொடர்புக்கு: 94424  22582

Friday, November 27, 2015

பீமேஸ்வரர் ---கீழத்தஞ்சை ----நாகை 


அன்பர்களே.....கீழ தஞ்சை  தர்மேஸ்வர ரை  தரிசனம் செய்தோம்  அல்லவா?
இப்போது  பீமன் வழிபட்ட  அற்புத லிங்கத்திருமேனி  பீமேஸ்வரரை தரிசனம்  செய்ய வாருங்கள்....மிக  வழுவழுப்பான அற்புத லிங்கத்திருமேனி .....கண்கள்  செய்த  பாக்கியம் தான் என்னே!!!

என்ன  தவம்  செய்தார்கள்  இந்த  கிராமத்து  மக்கள்....
ஐந்து  பெருமான்களையும்  ஒரே இடத்தில்  காண  கொடுத்து வைத்துள்ளார்கள்  அல்லவா?


























உங்கள்  கவனத்திற்கு:

 இத்தலம்  தேவார  பாடல் பெற்ற  திருசெங்காட்டான்குடி திருகோயில்  அருகே இரண்டு  கிலோமீட்டரில்  உள்ளது. திருமருகல்  தலத்திற்கு ஐந்து  கிலோ மீட்டர்  தொலைவு .....

Thursday, November 26, 2015

ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் திருகோயில் 

சாக்கோட்டை , குடந்தை.


சாக்கோட்டை , பெரியார் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. அழகான திருகோயில் இப்பெருமானுக்கு கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தேவாரபாடல்பெற்ற சாக்கோட்டை அமிர்தகலசநாதர் திருகோயிலோடு தொடர்புடையது இத்தலம். 

































குடந்தையிலிருந்து இரண்டு  கிலோமீட்டர்.

அன்பர்கள் தரிசிக்க வேண்டிய அற்புத தலம்.


பெரியார்  நகர்  ஆர்ச் --உள்ளே  சிறிது தொலைவு  நடந்து  சென்று  இத்தலத்தை  அடையலாம் ....

Wednesday, November 25, 2015

32  பட்டைகள் கொண்ட  அதி  அற்புத லிங்கத்திருமேனி --கீழ  தஞ்சை--நாகை 

தருமர்  வழிபட்ட  தர்மேஸ்வரர் 

பஞ்ச  பாண்டவர்கள் தங்கள்  வனவாசத்தின் போது  வணங்கிய  பஞ்ச லிங்கேஸ்வரர்கள்.


பாண்டவர்கள்  தஞ்சம்  அடைந்த  ஊர்  என்பதால் இப்பெயர் பெற்றது.தேவார பாடல் பெற்ற  திருசெங்காட்டாங்குடி திருத்தலத்திற்கு  இரண்டு  கிலோமீட்டர் தொலைவிலும் , திருமருகல்  தலத்திற்கு 5 கிலோமீட்டர்  தொலைவிலும்  உள்ளது.இதில்  தருமர் வழிபட்ட  தர்மேஸ்வர  பெருமான் வேறுங்கும் காண முடியாத வகையில்  32பட்டைகள்  கொண்டு  அற்புத சேவை சாதிக்கிறார்.தனித்தனியே  மேற்கூரை  அமைக்கப்பட்டுள்ளது ...மற்ற  பெருமான்களையும்  ஒவ்வொன்றாக  காண்போம்.....






Tuesday, November 24, 2015

காண  காண  திகட்டாத  கல்யாணபுரீஸ்வரர் --vasoor


எவ்வளவு முறை பார்த்தாலும் திகட்டாத பேரழகு பிரான் இவர்.
வசூர் கல்யானபுரீஸ்வரர் , போளூர்வட்டம் திருவண்ணாமலைமாவட்டம்.



இத்திருகோயில்  திருவண்ணாமலையிலிருந்து  சந்தவாசல்  செல்லும்  வழியில்  உள்ளது .




Monday, November 23, 2015

வழித்துணைக்கு  வருவார்  வழித்துணைபணீஸ்வரர் --ஆத்தூர்  



ஆத்தூர காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியில்உள்ளஒருசிற்றூர்.
பல அற்புத சிவாலயங்கள் இங்கு அமைந்துள்ளது்,
வழித்துணைபணீஸ்வரர் திருகோயில் அவற்றில்  ஒன்று.
பிறவிபெருங்கடலை நாம் கடப்பதற்கும் அவரே துணையாவார்.

ஆத்தூர்  முக்தீஸ்வரர்  திருகோயில் சோழ பேரரசர்களால்  கட்டப்பட்டது. 
மிக  புகழ் வாய்ந்தது ....
சப்த  சிவ  ஆலயங்கள்  இங்கு அமைந்துள்ளது .






Sunday, November 22, 2015

மருதம்பட்டினம்  அபிமுகேஸ்வரர்  திருகோயில்  

அதிகம்  அறியப்படாத அபூர்வ ஆலயம் 





















ஆழி  தேரோட்டத்திற்கு  பிள்ளையார் சுழி  போடப்படுவது  இங்கு தான்.

இங்குதான்  பஞ்ச பாண்டவர்கள்  பஞ்ச லிங்கங்களை  ஸ்தாபித்து  வழிபட்டனர் ..அகத்தியர்  வழிபட்டுள்ளார் ..

அவற்றில்  கிழக்கு  முகமாக  இரண்டு  லிங்கமும்  மேற்கு முகமாக  இரண்டு  லிங்கமும்  அமைந்துள்ளன ....

இது மிகவும்  விசேஷமான  அமைப்பு  என்று  கருதப்படுகிறது .

திருவாரூரை  ஒட்டி  அரை  கிலோமீட்டரில்  அமைந்துள்ளது  மருதம்பட்டினம் ..

Friday, November 20, 2015

செல்வ செழிப்பு , ஐஸ்வர்யம் பெருக , அழகார்புத்தூர் வாங்க !!!!

















புகழ்த்துணை நாயனாருக்கு , மக்களின் பஞ்சம் போக்குவதற்காக தினம் ஒரு பொற்காசு அளித்து அருளினார் இத்தல ஈசன் ,படிகாசுநாதர் . ஸ்வர்ணபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்
எங்கும் காண இயலாத வகையில் சங்கு சக்கரம் ஏந்திய முருகன் இத்தலத்தின் விசேஷ மூர்த்தி.


இங்கு  கருவறை  படிக்கட்டுகளில்  காசு  வைத்து,  அர்ச்சகர்  பூசித்து  கொடுத்தவுடன், அதனை  வாங்கி சென்று  வீட்டினில்  வைத்துகொள்ள வேண்டும் .  இவ்வாறு  செய்தால்  செல்வ வளம்  பெருகும். பஞ்சம்  நீங்கும் .

இருப்பிடம் :
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.

Wednesday, November 18, 2015

பாவட்டகுடி ------நன்னிலம்  வட்டம் -----நாகை மாவட்டம் 























கொல்லுமாங்குடி- திருநள்ளார் சாலையில் ஐந்து கிமி தூரத்தில் உள்ளது பாவட்டகுடி
பிரதான சாலையில் இருந்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது இத்திருகோயில் . சிறிய கோயில் என்றாலும் அழகாக உள்ளது. இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி-சிவகாமசுந்தரி.
இங்கு இன்னொரு சிவஸ்தலமும் உள்ளது . இறைவன் பாலேஸ்வரர்


Tuesday, November 17, 2015

அன்பு  பாசத்திற்காக  ஏங்குகிறீர்களா ? வருத்தம்  வேண்டாம்...இங்கே வந்து  வழிபடுங்கள்...


































அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை , நாகப்பட்டினம் மாவட்டம்.மயிலாடுதுறை  வட்டம் .

அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்


அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.
தரணி  போற்றும்  தரப்பாக்கம் சோமநாத ஈஸ்வரர் 



























குன்றத்தூர்  வட்டம் ,  குன்றத்தூர்  பம்மல்  சாலையில்  உள்ளது  தரப்பாக்கம் .

இங்கு  பலகாலம்  வெட்டவெளியில்  கோயில் கொண்டிருந்த பெருமானை 
பக்தர்கள்  சீரமைத்து  அழகானதொரு  திருக்கோயிலை  அமைத்துள்ளார்கள்.

திருகோயில்  அமைதியான சூழ்நிலையில் , விஸ்தீரணமாக அமைந்துள்ளது .
தூய்மையாக பராமரிக்கப்படுகிறது .

தியானம்  செய்ய  ஏற்ற திருகோயில். பெருமானின் கம்பீர திருமேனி காண்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் .

கொடுத்து வைத்தவர்கள் ,  சென்று  தரிசனம்  செய்யுங்கள் .
இங்கு  கைலாசநாதர்  திருகோயிலும்  உள்ளது. 

Sunday, November 15, 2015

வெள்ளலூர் தேனீஸ்வரர் திருகோயில் , கோவை

பகைவர்களை வெல்ல இங்கே வாங்க ..........



















கொங்கு நாட்டின் சூரியபூஜை நடைபெறும் பாஸ்கர ஷேத்ரம் இது. சித்திரை முதல் நாள் சூரிய கதிர்கள் இறைவன் திருமேனிமீது படர்ந்து ஜொலிப்பது கண்கொள்ளாகாட்சி.

அலாவுதீன் கில்ஜியின் படை தலைவன் மாலிக்காபூர் படையெடுப்பால் மிகவும் சிதைக்கப்பட்டு , சின்னபின்னமாக்கப்பட்டது இத்திருகோயில்.

ஒரு காலத்தில் ஐந்து பிரகாரங்களை கொண்ட, மிகபழமை வாய்ந்த இத்தலம் பின்னர் சீரமைக்கப்பட்டது.......

சத்ரு தோஷம், திருமண தடை , குழத்தை பேறின்மை , நாக தோஷம் , நீக்கும் தலம் இது .

கொங்கு நாட்டின் மிக பழமையான தலங்களுள் இத்தலம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .

காந்தி புரத்திலிருந்தும், உக்கடத்திலிருந்தும் பேருந்து வசதி உண்டு . தூரம் 12 கிலோமீட்டர் .

Saturday, November 14, 2015

கடலூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் 




கல்பாக்கம் அருகில் உள்ள கடலூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த சிவாலயம். சுவாமி ஸ்ரீ அக்னீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ சொக்கநாயகி. கற்கோயில். கோஷ்ட மூர்த்திகள், பிரகார விநாயகர், முருகன், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. நவகிரகம் கிடையாது. 


































ஒரு கால பூஜை நடைபெறுகிறது. அர்ச்சகர் திரு கணேச குருக்கள் 9894287813, தொடர்புக்கு திரு ரமேஷ் 95000 65319, திரு குமாரவேல் 9443658574. பேருந்து MATHURANTHAGAM- KADALOOR 100C, AND PRIVATE BUS MAHAVEER.

Thursday, November 12, 2015

எமையாளும்  ஈசா!!! ஏனிந்த நிலை !!!!!

அகரம், கடம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் வழி.


































மிக சிதிலமடைந்த சிவாலயத்தில் இறைவன்.
பக்கத்துணையாக பிள்ளை(யார்)கள் இருகிறார்கள்!!!!!!


அகரம் கிராமம் கடம்பூர் ரயில் நிறுத்தத்திலிருந்து, பேரம்பாக்கம் செல்லும்வழியில் இருக்கிறது,ஏராளமான ஷேர்ஆட்டோ வசதி உண்டு,கிராமத்தில் கேட்டால்சொல்வார்கள். சிறியகிராமம்தான்

Tuesday, November 10, 2015

பக்தர்களுக்கு அருளும் பழியஞ்சியநல்லூர்  

பெருமான் 



பழியஞ்சிய நல்லூர் பெருமான், திருநீலக்குடி வட்டம் , குடந்தை. 



தேவார பாடல் பெற்ற தலமான வைகல் மாட கோயில் செல்லும் வழியில் இத்திருகோயில் உள்ளது.குட்டக்கரை என்னும் இடத்தில் இறங்கி சிறிது தூரம் நடைபயணத்தில் இத்திருகோயில் உள்ளது .

 திருப்பணி மிகவும் மந்த கதியில் நடை பெற்று வருகிறது.
பெருமானின்  அழகு  வார்த்தைகளால் வடிக்க இயலாது .




அருகில் உள்ள வைகல் திருகோவிலுக்கும் பக்தர்கள் வருகை மிக குறைவு . இது கோட்செங்கட்சோழன் கட்டிய மாட கோயில்களுள் ஒன்று.