Friday, December 30, 2016


கொரநாட்டு கருப்பூர், குடந்தை.......

ஒருசமயம் காவேரியில் மிதந்து வந்த ஒரு பெட்டியை கிராம மக்கள் கண்டனர். திறந்து பார்த்தபொது மார்பளவே உள்ள ஒருஅம்மன் சிலையை கண்டு அதிசயித்தனர்.
பின்னர் காஞ்சி மகானின் ஆணைகிணங்க இங்குள்ள சுந்தரேஸ்வரர் திருகோயிலில் பெட்டிகாளி பிரதிஷ்டை செய்யப்பட்டாள். அன்று முதல் இப்பகுதியின் காவல் தெய்வமாக பிரசித்திபெற்று விளங்கிவருகிறாள்.
உக்கிரமாக காட்சிஅளித்தாலும் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவள்.
வருடத்திற்கு ஒருமுறைதான் அதுவும் பெட்டியோடுதான் இவள்
ஊர்வலம் காண்கிறாள். அப்போது மிகுந்த உக்கிரத்தோடு காணப்படுவதால் ஒரே ஓட்டமாக எங்கும் நிற்காமல் எடுத்து சென்று
சன்னதியை அடைந்த பின்னரே நிறுத்துகின்றனர்.

வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் பூஜை நடைபெறும் .....அப்போது இவள் தரிசனம் பெறலாம் ...
ராகு கேது தோஷம் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்கள் , இங்கு வந்து வழிபட்டு .பலன்  அடைகிறார்கள்  

மூலவர் இறைவன் சுந்தரேஸ்வரர்.....அன்னை அபிராமி

குடந்தை அருகே சென்னை சாலையில்  2 கிலோமீட்டரில் உள்ளது கொரநாட்டு கருப்பூர் 


















Monday, December 19, 2016

விண்மீன்கள் வழிபட்ட வேதநாயகன் 



தாம்பரத்திலிருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது செர்பனஞ்சேரி. இங்கு சாலை ஓரமாகவே உள்ளது இத்திருகோயில்.
27 நட்சத்திரங்களும் வழிபட்ட வீமீஸ்வரரை திங்கள், ஞாயிறு கிழமைகளில் தீபம் ஏற்றி வில்வதளத்தால் அர்ச்சித்து வழிபட மங்களங்கள் உண்டாகும்.

தூங்கானை மாடக் கோயில் வகையில் காஞ்சிக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் 18-ம் கோயிலாக இத்தலம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் சிவத் தலங்கள் இரண்டும் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவை. வீமீஸ்வரர் ஆறடி உயர லிங்கத் திருமேனியாராகக் கோயில் கொண்டுள்ளார். இடப்பாகத்தில் தேவி ஸ்வர்ணம் பிகை தெற்குநோக்கி அருள்கிறார்.



Saturday, December 17, 2016

குன்றாத இளமை பொலிவிற்கு இலம்பையன்கோட்டூர் 


அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர் 631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.

அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை


பூந்தமல்லியிலிருந்து பேருந்து வசதி உள்ளது ....

தக்கோலம் செல்லும் வழியில் நரசிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் செல்ல வேண்டும் .



Friday, December 9, 2016

சூரியனார்கோயிலில் ஒரு சந்திர தோஷ பரிகார தலம்...........
மக்களால் அறியப்படாத மகத்தான சிவாலயம் 

திருமாந்துறை(சூரியனார்கோயில்) அட்சய நாத சுவாமி திருக்கோயில் , மணலூர் அஞ்சல் 

↝இங்கு வந்து ஸ்ரீ யோகநாயகி சமேத அட்சயநாத ஸ்வாமியை வணங்கிய பின்னரே சூரியனார் கோயில் சென்று வணங்க வேண்டும் என்பது மரபு .
இது இந்த ஆலய வரலாற்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது 

↝சந்திரன் தன் க்ஷய (க்ஷயம் என்றால் குறைதல் என்று பொருள்) ரோகம் தீர வணங்கிய தலம் ...

↝ விருச்சிக ராசி காரர்கள் , ரோகினி நட்சத்திரம் கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் 

↝ காலமா முனிவருக்கும் , நவகிரஹங்களும் க்ஷய ரோகம் நீங்குவதற்காக இங்குள்ள அட்சய தீர்த்தத்தில் நீராடி 
அட்சய நாத ஸ்வாமியை வணங்கி , துயர் நீங்கப்பெற்ற தலம் .

↝  அன்னதோஷத்தால் துன்புறுவோர்கள்  ...அதாவது உண்ண  உணவு இருந்தும் சாப்பிட முடியாமல் துன்புறுவார்கள், வறுமை காரணத்தால் உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் , பெற்றோரை பசியால் 
வாட செய்ததால் ,இறைவனுக்கு படைக்காமல் உண்டதால் ஏற்பட்ட தோஷம் இப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதால் நிவர்த்தியாகும் .....
↝சூரியனுக்கு ஒளி கிரணங்கள் குறைந்தபோது , ஒளி பிரகாசத்தை கொடுத்த தலம் 

↝  இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் அட்சய த்ரிதியை அன்று வணங்குவதால் குபேர சம்பத்து ஏற்படும் .......

↝ அன்று இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 64 பொருட்களால் பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது .
இதை பிரசாதமாக உண்பதன் மூலம் அனைத்து விதமான உடல் குறைகள் நீங்கும் ...

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோயில் ஆடுதுறை அருகே சூரியனார் கோயில் பின்புறம்(அரை கிலோமீட்டர்)  அமைந்துள்ளது ..
மிக சக்தி வாய்ந்த இந்த திருக்கோயில் பக்தர்களால் அதிகம் அறியப்படாமல் உள்ளது மிகவும் வேதனை ...

சூரியனார் கோயில் வரும் பக்தர்கள் முதலில் அட்சயநாத ஸ்வாமியை வணங்க வேண்டும் .....
ஆனால் இந்த திருக்கோயில் அதிகம் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ...
அட்சய திருதியை அன்று மட்டும் திருவிழா காண்கிறது இந்த திருக்கோயில் .....

ஆலய அர்ச்சகர் திரு ராஜு சிவம் .....
அலைபேசி எண் :9994032380



Sunday, November 27, 2016

நலிந்த சிவாலயங்களுக்கு உதவுங்கள் !!!!  நலம் பல பெறுங்கள் !!!!!!

அன்பர்களே.......சிவாலய திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் பல தலைமுறையினர் பலன் பெறுவார் ....இது ஆன்றோர்கள் வாக்காகும் .......

ஆயிரம் புது கோயில்களை கட்டுவதை விட, இருக்கின்ற பழமையும் புராதன பெருமையும் வாய்ந்த இத்தகைய திருக்கோயில்களை சீரமைப்பது அஸ்வமேத யாகம் செய்யவதற்கு ஒப்பாகும் .....

இத்தகைய செயற்கரிய செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் நாம் ,நம்மால் முடிந்த பொருளுதவி செய்வது நமது கடமை  அல்லவா?  

அன்பர்களே..... திருக்கோயில்கள் நிறைந்த திருவாரூர் மாநகரம் ...இங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில்  கச்சனம் அருகே ஆப்பரக்குடி கிராமத்தில் மிகவும் சிதிலமடைந்த இந்த சிவாலயத்தை சீர்திருத்தி ,

செப்பனிட முயன்று வருகிறார்கள் ஓம்காரம் இறைபணி மன்றம், நமசிவாயபுர நாதர் அடியார் திருக்கூட்டம் அன்பர்கள் ....
இறைவன் திருநாமம் அருள்மிகு அமிர்தலிங்க சுவாமி

இந்த ஆலயத்தில் அம்பாள் சன்னதி புதிதாக அமைக்கவும், சுவாமி சன்னதி பழுது நீக்கி புதுப்பிக்கவும் திருப்பணி உபயதார்ர்கள் வரவேற்கப்படுகிறார்கள். சிமெண்ட் 70 மூட்டை, மணல் 3 யூனிட், செங்கற்கள் 7000 தேவை. அன்பர்கள் இந்த ஆலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை  உங்களிடம் கோருகிறார்கள். 
அலைபேசி எண்கள் தந்துள்ளேன் .... 

ஓம்காரம் இறைபணி மன்றம்@ 9095265980, 8678900455




Friday, November 25, 2016

திருமண தடை நீக்கும் திருவேள்விக்குடி திருத்தலம் 


திருவேள்விக்குடி.மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்திலிருந்து. 3 கி.மீ. தூரத்தில் உள்ளது .

ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, இங்கு இறைவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.

அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க திருமணஞ்சேரியில் மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு.

தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

இறைவன் மணவாளேஸ்வரர் , இங்கு வந்து வழிபடும்.திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.



Thursday, November 24, 2016

பட்ட துயர் யாவும் பகலவனை கண்ட பனி போல் நீங்கும் பட்டமங்கலம் அபிமுகேஸ்வரர் அருளால் ....

சிக்கலில் வேல் வாங்கி சூரபத்மனை வென்ற முருகப்பெருமான் , தன ப்ரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக 9 இடங்களில் சிவ லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
அகர கடம்பனூர் , இளம் கடம்பனூர் , கடம்ப வாழ்க்கை ஆழி கடம்பனூர் ,என்பன அவற்றுள் சில .....
இத்திருத்தலங்கள் அனைத்தும் நாகை மாவட்டம் கீவளூர் அருகில் அமைந்துள்ளது ....

இறுதியாக பட்டமங்கம் வந்தார் .....

இங்கு மேற்கு நோக்கிய ஆனந்தவல்லி சமேத அபிமுகேஸ்வர பெருமானை இறுதியாக வணங்கி தோஷம் முழுதும் நீங்கப்பெற்றார் ...

முருகப்பெருமானின் தோஷத்தை நீக்கி அருளிய பெருமானுக்கு நம் பிரச்சனைகளை களைவதா கடினம்?

அன்பர்களே......  இப்பெருமானை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?

தெரிந்தோ தெரியாமலோ நம் முற்பிறவிகளில் , இப்பிறவியிலும் செய்துள்ள பாவ செயல்கள் அடியோடு அகலும்...
செல்வ செழிப்பு ஏற்படும் ...
நாட்பட்ட நோய்கள்  நீங்கும் ....
இன்னும் எவ்வளவோ நன்மைகள் அடையலாம் .....

சிதிலமடைந்த இந்த திருக்கோயிலை கிராம மக்கள் பெரு முயற்சியோடு சீரமைக்க முயற்சித்து வருகிறார்கள் 
அன்பர்களே..... மிகவும் தூர்ந்து விட்ட திருக்கோயில் குளத்தை தங்கள் சொந்த முயற்சியிலேயே , மாற்று இடத்தில் ,கோயிலுக்கு நேரெதிரே அமைந்துள்ளார்கள் ....தற்போது இத்திருக்குளம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது ......

இத்திருப்பணியில் பங்கு பெற , பட்டமங்கலம் கிராம மக்கள் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் ...   சரி .....சிக்கல் திருகோயிலோடு நெருங்கிய தொடர்புடைய இத்திருக்கோயில் எங்குள்ளது ?
இருப்பிடம் :
சிக்கல் அருகே கீவளூர் திருத்தலத்திலிருந்து , தேவூர் செல்லும் வழியில் 2 கிலோ மீட்டரில் பட்டமங்கலம் என்னும் இந்த கிராமம் உள்ளது ....இங்கு புராதனமான காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது ....

அன்பர்களே.....சென்று வழிபடுங்கள் , திருப்பணியில் பங்கு பெறுங்கள் ......அபிமுகேஸ்வர பெருமானின் அருளை பெற்று வாருங்கள் .....

தொடர்புக்கு :

பாவா என்கின்ற திரு P .K . ஜெயபால் நாயுடு 

அலைபேசி எண் : 9786582126





Saturday, November 19, 2016

வேற்காடு மேவிய வேத நாயகன் 

திருவேற்காடு கருமாரி அம்மன்  திருக்கோயிலை  அறியாதவர்கள் இருக்க முடியாது. 
இங்குள்ள தேவார பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்த தலமாகும் ....

திருவேற்காட்டை சுற்றிலும் எட்டு திக்கிலும் இந்திரன் முதலான அஷ்ட திக் பாலகர்கள் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கியுள்ளார்கள்.

இவை திருவேற்காட்டை சுற்றிலும் 5  km க்கு உள்ளாகவே அமைந்துள்ளது.

இத்தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மிகுந்த நற்பலன்களை அளிக்கக்கூடியது.

படத்தில் காண்பது ஈசான்ய பாகத்தில் உள்ள ஈசான்ய லிங்கேஸ்வரர்.
இவர்(நம் உலகம் உய்வதற்காக ) சாலை விரிவாக்கத்தின் போது கிடைக்கப்பெற்றார்.

கோயில் அமைந்துள்ள பகுதி சின்ன கோலடி  என்று வழங்கப்படுகிறது

அரும் பாடு பட்டு அற்புத திருகோவிலை அன்பர்கள் அமைத்துள்ளனர்.

இறைவன் பருத்த திருமேனியை உடைய அழகிய ஒளி பொருந்திய தோற்றம் கொண்டவர்...

கொடுத்து வைத்தவர்கள் சென்று தரிசனம் செய்யுங்கள் 


Tuesday, November 15, 2016

அறியபடாத அபூர்வ ஆலயம்--செங்குன்றம் (சிங்கபெருமாள் கோயில்)ஏரிக்கரை ஏகபந்தீஸ்வரர் திருகோயில் .
பக்தன் ஒருவரை பலகாலம் உசுப்பி தனக்கு கோயில் கட்டி கொண்ட கருணையாளன் ...

சிங்கபெருமாள் கோயில் பிரதான  சாலையிலிருந்து சுமார் அரை km தூரத்தில் உள்ளது இத்தலம்.மிகவும் சக்தி வாய்ந்தது.
இங்கு அவர் குடி கொண்டதே மிகவும் சுவாரஸ்யமான விஷயம் ....
லோகநாதன் என்பவர் செங்குன்றத்தில்(சிங்கப்பெருமாள் கோயில் ) வசித்து வந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் .. பலகாலமாக பூமியில் புதைந்திருந்த லிங்க திருமேனியை லோக நாதன் தனது சிறு வயதில் வணங்கி வந்துள்ளார் .பின்னர் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர் ஏறக்குறைய ஏகபந்தீஸ்வரரை மறந்தே போனார் .ஆனால் இறைவன் அவரை விடவில்லை ..
தனது திருவிளையாடலை துவக்கினார் 

ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல சுமார் 6 மாத காலம் தூங்கவிடாமல் 
உசுப்பி உசுப்பி இறைவன் தனக்கு ஒரு திருகோயில் அமைத்து கொண்டான்.
 பலகாலம் பூமியில் புதைந்திருந்த லிங்கத்திருமேனியை லோகநாதன் வாத்தியார் மற்றும் சிவனேய செல்வர்கள் பலரும், முருகாஸ்ரமம் சிவத்திரு சாந்தானந்த ஸ்வாமிகள் அவைகளின் பெருமுயற்சி மற்றும் பொருளுதவியோடு அற்புதமான் திருகோயிலை அமைந்துள்ளனர்.

இன்று கருவறையில் கம்பீரமாக ஆரோகணித்துள்ளார் ஏரிக்கரை ஏகபந்தீஸ்வரர்.பார்க்க பார்க்க திகட்டாத திருமேனி.


Tuesday, November 8, 2016

வாழ்வில் வளம் சேர்க்கும் ஆலயம் 
உருக்குலைந்த உமையொருபாகன் திருக்கோயில்

வருமானத்திற்கு வழியில்லாத ஆலயங்கள்  என்றால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதுதான் அறநிலையத்துறையின் அலட்சிய மனோபாவமா?

அன்பர்களே  ....கைலாயத்தில் மட்டுமே வளரக்கூடிய அறிய மூலிகையான சிவ கரந்தை என்னும் செடி மண்ணில் இங்கு மட்டுமே வளர்கிறது .....

சிவராத்திரியன்று மூன்றாம் கால பூசையின் போது இது இறைவனுக்கு சாற்றப்படுகிறது ....
நாக தோஷம் நீக்கும் சுந்தர நாயகி சமேத நாகநாத ஸ்வாமியை, சிதிலமடைந்த திருக்கோயிலாக இருந்தாலும் , உள்ளூர் அன்பர்களும் அடியார் பெருமக்களும் பெருமளவில் வழிபடுகின்றனர் ....

ஒருகாலத்தில் வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த திருமறைச்சேரி (தற்போது மாறச்சேரி ) என்று அழைக்கப்படும் இந்த சிற்றூர் நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் , திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் மணலி  என்னும் இடத்திற்கு அருகில் இத்திருக்கோயில்  அமைந்துள்ளது ....

கிடைத்தற்கரிய இத்திருக்கோயில் மிக சிறந்த ஒரு பரிகார தலமாகும் ...... வாழ்வில் வளம் சேர்க்கும் திருக்கோயிலாகும் ....
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போன்று , அரிய இத்திருக்கோயில்களை
நாம் அறியாமல் விட்டு விடுகிறோம் .....

தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகளை துவக்க அன்பர்கள் சித்தமாய் உள்ளனர்

எனவே அடியார்களும்,சிவ பக்தர்களும், திருப்பணி உபயதாரர்களும் முன்வந்தது    ஆலய திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
*ப.முத்துக்குமரன*்+91 9840063124
*ச.வேதையன்*+91 7708240152

.குறிப்பு : இத்திருக்கோயிலை பற்றி விரிவாக சக்தி விகடன் நாளிதழ் வெளியிட்டுள்ளது 



Wednesday, November 2, 2016

தேனீக்களின் ரீங்கார இசை இனி கேட்குமா ?  அன்பர்களே.....

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்.....
சுபர் மகரிஷி, திருக்கோயில் சாற்றி விட்டதால் , தேனீ வடிவத்தில் வந்து வழிபட்ட தலம் இது .....இவர் வழிபட்ட பெரிய லிங்க திருமேனி மேற்கு நோக்கிய தனி சந்நிதியாக அமைந்துள்ளது ......

அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை இப்போதும் கேட்கலாம்.....

ஆனால் இதெல்லாம் முன்னொரு காலத்தில் என்று கூறும்படி ஆகிவிட்டது ........
திருப்பணி செய்யும்போது இத்தேனடை கலைக்கப்பட்டு விட்டது ...
பல்லாண்டு காலமாக இருந்த இத்தேனடை தேனை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் இங்கு இருந்தது ....மறுபடியும் தேனடை இதே இடத்தில் அமைக்கப்பட்டு விடுமாம் ....

தற்போது இத்தேனடை திருப்பணி என்ற பெயரில் கலைக்கப்பட்டு விட்டது , அதை காண வேண்டும் என்று ஆவலோடு சென்ற எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது ....

திரும்பவும் தேனீக்கள் வருமா? தேனடை அமைக்கப்படுமா ? காதில் தேன் மாறி பொழியும் 
அந்த செய்திக்காக காத்திருக்கிறேன் ...


கொட்டாரம் நெடுங்காடு வழியாக குடந்தை காரைக்கால் மார்க்கத்தில் கொட்டாரம் கூட்டு ரோடிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது 



Friday, October 28, 2016

மனம் நிறைவான வாழ்க்கைக்கு மண்ணிப்பள்ளம் ஆதிவைத்தியநாதர் தரிசனம் 

முகநூல் அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் .......
இன்று பிரதோஷம் .....எனவே தவறாமல் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்யுங்கள்.

இந்த பிரதோஷ தினத்தில் பழமையும் புராதன பெருமையும் ஒருங்கே அமைந்த 
மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாதர் திருகோயில் தரிசனம் செய்வோம் .....

புள்(சடாயு பறவை ) இருக்கு (ரிக் வேதம் ) வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அறிமுகம் தேவையில்லை ....அன்பர்களே... ஆனால் இங்கு சுற்றிலும் அமைந்துள்ள பஞ்ச வைத்யநாத தலங்களை ஒரே நாளில் வழிபட , நம் வினை பயன்கள் தொலைந்து , வியாதிகள் தீர்ந்து , நன்மை மிக விளையும் ..
மயிலாடுதுறை வட்டம், சீர்காழி அருகே உள்ள இந்த தலம் பஞ்ச வைத்யநாத தலங்களில் இத்தலம்  முதன்மையாக போற்றப்படுகிறது.

மற்ற தலங்கள் : ராதா நல்லூர் , பாண்டூர்,ஐவ நல்லூர் , வைத்தீஸ்வரன் கோயில் , தலங்களாகும் .

இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பு. திருக்கோயில் அன்பர் ஒருவரது சீரிய முயற்சியால் சிதைவிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்று அற்புதமாக திகழ்கிறது ......

கருவறையில் ஆதி வைத்தியநாதர் மிகப்பெரிய திருமேனி கொண்டு அற்புதமாக காட்சி யளிக்கிறார் .

இத்தலத்திற்கு அருகிலேயே கொண்டல் முருகப்பெருமான் ஆலயம், திருகுரக்குக்கா ,வாளொளிபுத்தூர் திருக்கோயில் போன்ற அரிய திருத்தலங்கள்  அமமைந்துள்ளன ...

Wednesday, October 26, 2016

எல்லாமே இங்கு சதுரம் 
காஞ்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் அருகிலுள்ள 'சோமங்கல சோமநாதர் கோவில்.' இங்குள்ள நடராஜர் எங்குமில்லாத சதுர தாண்டவ கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இக்கோவிலும் கோவிலைச் சுற்றி வேலி போன்று 12 எல்லைக் கோவில்களுடன் சரியான சதுரஅமைப்பில் சதுர்வேதியாக அமைந்துள்ளது.
எங்குமே காண இயலாததாகும்.

இதனாலேயே இக்கோவில் ' சதுர்வேதி ' என்றும் ' சதுர தாண்டவ ஆலயம் ' என்றும்
கூறப்படுகிறது. 

இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரம்.


சென்னையை  சுற்றியுள்ள நவகிரஹ திருக்கோயில்களில் முதன்மையானதும் , சந்திரன் வழிபட்ட தலமாகவும் விளங்குகிறது .......சோமன் (சந்திரன்)  வழிபட்டதால் சோமநாதர் என இறைவன் அழைக்கப்படுகிறார்...


திங்கட்கிழமைகளில் வழிபட மன கிலேசங்கள் , மன குழப்பங்கள் நீங்கி  மனம் புத்துயிர் பெறும் .....
சென்று வணங்கி வாருங்கள்...மனம் லேசானதை உணர்வீர்கள் ......



Thursday, October 20, 2016

நீங்கள்  விரும்பும் நபரிடமிருந்து அன்பு ,பாசம் , பரிவு உங்களுக்கு கிடைக்கவில்லையா ?  

நிச்சயம் கிட்டும் ....நீங்கள் இத்தல இறைவனை வழிபட்டால் .........

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை , நாகப்பட்டினம் மாவட்டம்.

அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும் 

அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.


மயிலாடுதுறையிலிருந்து 8 கிலோமீட்டரில் இத்தலம் உள்ளது ....

பேருந்து வசதி உண்டு ....


Thursday, September 29, 2016

மகாளய பட்சம் ஏன் அனுஷ்டிக்க வேண்டும் ....?


பிதுர்களின் ஆசீர்வாதம் என்பது வங்கியில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கை போன்றது ...
தக்க சமயத்தில் நமக்கு கைகொடுக்கும் ....ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் .....

அவர்களின் பூத உடல் இல்லை  என்றாலும் அவர்களின் ஆன்மா நம்மை பற்றி சிந்தித்து கொண்டே தான் இருக்கும் 
நம் சந்ததியினர் நம்மை பற்றி சிந்திக்கிறார்களா? என்பது அவர்களின் கவலைகளில் ஒன்று..

சந்ததியினரின் மன நிலை பாதிக்கப்படுவது , ஊனமுற்ற சந்ததியினர் , குடும்பத்தில் அடிக்கடி நிகழும் தற்கொலைகள் , மழலை பாக்கியமின்மை இவற்றிற்கு பிதுர்களின் கருணை இல்லாததே காரண மென்று கூறப்படுகிறது .......அன்பர்களே ...இதுவரை பிதுர் கடமைகளை சரிவர நிறைவேற்றாதவர்கள் கூட,
சில தலங்களுக்கு சென்று அதற்கான பரிகாரம் செய்து வரலாம் .....
 இதனால் அவர்களின் அருள் ஆசி கிடைக்கும் ....
திருவாரூர் மாவட்டம் , கங்களாஞ்சேரி வழியாக , நாகை செல்லும் பாதையில் உள்ளது சனி ப்ரீதி 
தலமான , சனீஸ்வர வாசல் எனப்படும் காரையூர் .....

இங்குள்ளது  சங்கர நாராயணி சமேத சங்கர நாராயணர் திருக்கோயில் .....
இங்கு எழுந்தருளியிருக்கும் சனி பகவான் அனுகிரக மூர்த்தியாக விளங்கி , அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார்......அது மட்டுமில்லாமல் இத்தலம் சிறந்த பிதுர் தோஷ நிவர்த்தி தலமாகவும் ......அருகில் ஓடும் விருத்த கங்கையில் நீராடி இங்கு பிதுர் கடன்களை முடித்து , அவர்களின் பரிபூரண ஆசியை அடையலாம் ......

இதனால்  ஏராளமான நன்மைகளை வாழ்வில் நீங்கள் அடையலாம் ......

சனி கிழமைகளில் விசேஷ யாகங்கள் நடத்தப்படுகிறது ....இதில் கலந்து கொண்டும் பலன் பெறலாம்...
குருக்கள்  அகம் இத்திருக்கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தான் உள்ளது ......

திருநள்ளாறுக்கும் , திருகொள்ளிக்காட்டிற்கும் நடுநாயக மாக இத்தலம் விளங்குகிறது என்பது குறிப்பிட தக்கது .





Tuesday, September 27, 2016

அன்பர்களே ...இன்று பிரதோஷம் ...திருக்கோயில் தரிசனம் செய்ய மறக்காதீர்கள் ...

தேவார பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள அஷ்ட லிங்கங்களில் 

வருண பகவான் வழிபட்ட ஜம்புகேஸ்வரலிங்கம், மேட்டுப்பாளையம் கிராமம், பூந்தமல்லி வட்டம், பட்டாபிராம்--பூந்தமல்லி சாலை. 

இத்தலம் திருவேற்காடு சுற்றியுள்ள அஷ்டதிக் பாலகர்கள் வணங்கிய எட்டு தலங்களுள் இதுவும் ஒன்று.


பெருமான் பருத்த திருமேனியை உடைய பாண லிங்கமாக அருள்புரிகிறார் ....


ஆவடி பூந்தமல்லி வழியாக  மாநாடு பேருந்து நிறுத்திலிருந்தும் இந்த  இடத்திற்கு செல்லலாம் 


இவரைவழிபடுவதால்,,


⇒ வறுமை விலகும், வளம்பெருகும்
⇒ மகப்பேறுவாய்க்கும்
⇒ கடன் தொல்லைநீங்கும்.
⇒ அறியாமைநீங்கி, ஞானம் பிறக்கும்







Monday, September 26, 2016

மயூரத்தில்  ஒரு  ஐயாறு .....


⇒தன்  பரம பக்தன் ஒருவனுக்காக  பரமன் ஐயாறப்பராக  காட்சி யளித்த தலம் 

தஞ்சையில் வசித்தது வந்த சிவபக்தர்களான தம்பதியர் நாத சர்மா , அனவித்யய்
தினசரி திருவையாறு சென்று வணங்குவதை தன்  வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தனர்.

⇒இவர்களின் பவித்ரமான  பக்திக்கு இணங்க இறைவன் ,தனக்கு மயூரத்திலேயே கோயில் கொள்ள 
இசைந்து எழுந்தருளியுள்ள திருக்கோயில் தான்  மயிலாடுதுறை ஐயாறப்பர் திருக்கோயில் ஆகும்.

அன்னை  தர்மஸம்வர்த்தினி 

⇒இவர்கள்  லிங்க திருமேனியராக இன்றும் மயூரநாதர் திருக்கோயிலில் கோயில் கொண்டுள்ளனர் ...
⇒ அனவித்யய் எழுந்தருளியுள்ள லிங்க திருமேனிக்கு இன்றும் புடைவை சாற்றப்படும் வழக்கம்  உள்ளது.


தற்போது இத்திருக்கோயில்  திருப்பணி செய்யப்பட்டு மிக நேர்த்தியாக விளங்குகிறது ...

மயிலாடுதுறை  பெரிய கோயிலான மயூரநாதர் கோயில்  அருகிலேயே பிரதான சாலை ஓரமாகவே 
அமைந்துள்ள இத்திருக்கோயில் 3 நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது .....

கோயில்  நுழைவாயிலில் காணப்படும் கைலாய காட்சி மிக அற்புதம்.

அடியார்கள் தரிசிக்க வேண்டிய அற்புத திருக்கோயில் இது ...


Friday, September 23, 2016

தீபாவளி  திருத்தலம் .....


காசியை போன்று  தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய தலம் திருத்தங்கூர் 

மகாலட்சுமி இத்தலத்தில் தங்கி பூசித்ததால் 'திருத்தங்கூர்'. எனவே இத்தலத்தை தரிசிப்போருக்கு பொருள் சேர்க்கை ஏற்படும்.

நவக்கரகங்கள் அனைத்தும் தனித்தனியாக சிவலிங்க பிரதிஷ்டை செய்த இடம். இந்த லிங்கங்களை தரிசிபோருக்கு க்ரஹ தோஷம் நீங்கும்.

கங்கை தீர்த்தத்தை ஏற்படுத்தி இறைவனை வணங்கிய தலம் .கங்கைக்கு ஒப்பான தீர்த்தம்.
இதனை தரிசிப்போருக்கு காசிக்கு சென்று வந்த பலன் உண்டாகும்

அனைத்திற்கும் மேலாக தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய தலம்.

இத்தகைய பெருமைகள் அனைத்தும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி மார்க்கத்தில் இருக்கும் திருத்தங்கூர் தலத்திற்கு உண்டு.
புகழ் பெற்ற திருகொள்ளிகாடு , திருநெல்லிகாவல்,கச்சனம்  போன்ற தலங்கள் இத்தலத்தின் அருகிலேயே உள்ளன.
ஆனால் பக்தர்கள் வருகையோ மிகவும் குறைவு.
இந்நிலை மாறவேண்டும் , அன்பர்களே ஆயிரம் திருகோயில்ககளை கட்டுவதை விட , இத்தகைய புராதனமான திருகோயில்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

எதிர்வரும் நம் சந்ததியினருக்கு இதுவே நாம் செய்யபோகும் சிறந்த செயல் 


இத்தலம் புகழ் பெற்ற திருக்கொள்ளிக்காடு(பொங்கு சனி ஷேத்திரம் ) செல்லும்  வழியிலேயே உள்ளது ..


Wednesday, September 21, 2016

கட்டளைக் கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி !!!
உலகிலேயே கட்டளைக் கல்லால் ஆன ஒரே சிவலிங்கம் !!!
அருள்மிகு நீலகண்டர் திருக்கோயில்,கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வளாகம்,உதயப்பூர், இராஜஸ்தான்.
முதற்கண் ,கட்டளைக் கல் என்றால் என்ன என்பதைப் பாப்போம் .பொன் உரசும் கல்தான் கட்டளைக்கல்.. சங்க இலக்கியங்களில்,திருக்குறள் உட்பட பல நூல்களில் இந்த சொல் பயின்று வருகிறது.தங்கத்தின் மாற்றை உரசிப் பார்த்து,தரத்தைக் காணும் கல்தான் கட்டளைக்கல்.[பொன் உரசும் கல்.]
இந்த கட்டளைக்கல்லால் ஆன ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கத்திருமேனி, கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) வளாகத்தில்,அருள்மிகு நீலகண்டர் திருக்கோயிலில் உள்ளது.சிவப்பரம்பொருளின் கருணையின் திரு வடிவமாக விளங்குகின்ற நஞ்சுண்ட அவரின் திருநீலகண்டத்தின் நிறம் போலவே ,அடர் நீலநிறக்கல்லால் அமைந்த சிவலிங்கத்திருமேனி இது. பீடம்,ஆவுடையார்,பாணம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரே கட்டளைக் கல்லால் அமைக்கப்பட்ட ஆறு அடி உயரத் திருமேனி இது.

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆன்மிக தாகம் கொண்டோருக்கும் அற்புத அனுபவத்தைத் தரும் தலம் இந்த கோட்டை..
கும்பல்கர்க் கோட்டை (Kumbhalgarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் மலைக்கோட்டைகளுள் ஒன்றாகும். 15 ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மேவார் மன்னர் கட்டிய இக்கோட்டை உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. உலகின் மிக நீளமான சுவர்களில் இரண்டாவதான இதனை உலக பாரம்பரியக் குழு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது..
கும்பல்கர் கோட்டை பதின்மூன்று சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.
பதினைந்து அடி தடிமன் கொண்ட கோட்டைச்சுவர். நாற்பதடி உயரம். அது முகப்பில் பிரம்மாண்டமான நீர்த்தாழிகளை வரிசையாக வைத்தது போல வளைவு வளைவாக நின்றது. கனத்த கருங்கற்களால் ஆன கோட்டை
இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தக் கோட்டையின் சுவர், சீனப்பெருஞ்சுவருக்கு பிறகு உலகின் மிக நீளமான சுவராக கருதப்படுகிறது.
மேலும் இந்தக் கோட்டையில் மகாராண பதே சிங் எனும் மன்னரால் கவிகை மாடங்களுடன் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் உள்ளது.
ராணா பிரதாப் சிங் அங்குதான் பிறந்தார். ஆகவே அது ராஜபுத்திரர்களுக்கு ஒரு புனிதத் தலம்போல.
ராணா கும்பா அங்கே நூற்றியெட்டு சமணக் கோயில்களை மீண்டும் கட்டினார். சிவன் காளி விஷ்ணு கோயில்களையும் கட்டினார்.



Sunday, September 18, 2016

ஞான  மார்க்கத்திற்கான  நல்லதொரு  திருக்கோயில்
↝கனவிலும்  காண முடியாத அற்புத திருக்கோயில
↝மகா பெரியவா  ஆராதித்த மகத்தான தலம் .
↝ஒவ்வொரு  இன்ச்சிலும் மிக சுத்தமாக பராமரிக்கப்படும் ஆலயம்
↝இறை திருமேனிகள் மிக கம்பீரமாக ,தோற்றமளிக்கும் தலம்
↝அங்கங்கு போடப்படாமல் இறை வஸ்திரங்கள் அழகாக அடுக்கப்பட்டிருப்பதை இங்கு மட்டும்ணே காண முடியும்
↝இங்கு அன்னை மீனாட்சி க்கு செய்யப்படும் அலங்காரத்தை போன்று வேறெங்கும் காண முடியாது ..

அன்பர்களே....,  இத்தனைக்கும்  காரணகர்த்தா திரு குமார் அவர்கள் ...
இவர் இத்திருக்கோயிலின் அர்ச்சகரும் , பாதுகாவலரும் ஆவார்...கோயில் எதிரிலேயே இவர் கிரஹம் ..

சரி ......  எந்த திருக்கோயில்?   எங்குள்ளது ?

விடயபுரம் ஸ்ரீ சுந்தரேஸ்வர பெருமான் சமேத மீனாக்ஷி அம்மன்  திருக்கோயில்  தான் அது .....
திருவாரூர்  மாவட்டம், கொரடாச்சேரி வட்டம் , கொரடாச்சேரியிலிருந்து  5 கிலோ மீட்டரில்  , தேவார பாடல் பெற்ற  கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட  திருவிடைவாய் என்னும் தலத்திற்கு  மிக அருகில் அமைந்துள்ளது ..

தீர்த்தம்  : பாண்டவர்  ஆறு .....

ஆனால்  அன்பர்களே.....  கிடைத்தற்கரிய  இத்தகைய  அரிய  கலை  களஞ்சியத்தை கண்டு கொள்வோர் யாருமில்லை என்பது  வேதனை ........

கையில்  வெண்ணையை (இத்தகைய திருக்கோயில்கள் )  வைத்து கொண்டு  நாம் நெய்க்கு  (மன அமைதி )அலைகிறோம்....

மணிக்கணக்கில்  வரிசையில்  நின்று  அடித்து பிடித்து கொண்டு  எனோ தானோ வென்று  தரிசனம்  செய்து விட்டு  வருகிறோம் .....

இந்த  திருக்கோயிலுக்கு  வந்து  பாருங்கள்.... பின் நீங்களே  சொல்வீர்கள் ......
அருகிலேயே  அரை கிலோமீட்டரில்  கண் நோய்கள்  தீர்க்கும்  கண் கொடுத்த வணிதம் திருக்கோயிலும் உள்ளது ..

நவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது  இங்கு ...கொலுவும்  உண்டு ...

வரும் நவராத்திரிக்கு மீனாக்ஷிக்கு  அணிவிக்க  வஸ்திரங்கள்  தேவைப்படுகிறது ....மற்றும் விளக்கேற்றும்  எண்ணெய் .....சுண்டலுக்கான பொருட்கள்  தேவை ......

இவற்றை  அளிக்க  விருப்பமுள்ளவர்கள்  திரு குமார் ( 9865706651) அவர்களை  தொடர்பு  கொள்ளலாம் ....

இவர்  ஸ்ரீ  மீனாட்சி  அம்மை  உடனாய  ஸ்ரீ சுந்தரேஸ்வரரின்  அருளை  பெற  உங்கள்  அனைவரையும்  அன்புடன்  அழைக்கிறார் .....


திரு  குமார்
அலைபேசி எண் 9865706651






Tuesday, September 13, 2016

இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் தர்மேஸ்வரர்!


சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை என்ற இடத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் அணைக்கட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் அறம் வளர்த்தீஸ்வரர் என்றும் தர்மேஸ்வரர் என்றும் திருநாமம் தாங்கி அருளுகின்றார்.

 நந்தியம்பெருமான் அளவில் மிகப் பெரிய வடிவத்தில் நெடிதுயர்ந்து அமர்ந்த கோலத்தில் உள்ளார். நந்தியம்பெருமானின் கழுத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ருத்திராட்சமாலை, சங்கிலி, சலங்கை, மணி போன்ற அணிகலன்கள் அழகூட்டுகின்றன.   
இதனருகில் சோழர்கால கல்வெட்டு பொறிக்கப்பட்ட கட்டடப்பகுதி காணப்படுகிறது. இத்திருக்கோயில் சோழர்கால கோயிலாக விளங்கி, பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கவேண்டும் என ஊகிக்க முடிகிறது.
கருவறையில் மூலவர் ஸ்ரீ அறம்வளர்த்த ஈஸ்வரர் எனும் ஸ்ரீ தர்மேஸ்வரர் வட்டவடிவ ஆவுடையாருடன் அமையப்பெற்ற சிவலிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார்.
ஈஸ்வரன் சந்நிதிக்கு வலப்புறம் அம்பிகை "அறம்வளர்த்த நாயகி', "தர்மவர்த்தினி' என்ற திருநாமங்களைத் தாங்கி, தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும் அடியவர்களின் துயரங்களை போக்கும் தன்மையில் சந்நிதி கொண்டு அருளுகின்றார்.
அம்பிகை சந்நிதிக்கும் இறைவன் சந்நிதிக்கும் நடுவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக சந்நிதிகொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

இது தர்மபுத்திரர் ஆராதித்த தலமாகும். அதனால் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீதர்மேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருளுகின்றனர். தர்மராஜா சூதாட்டத்தில் தான் இழந்த செல்வத்தை இவ்வாலய ஈசனை வழிபட்டு அவர் அருள் பெற்று மீட்டதாகத் தெரிகிறது. 
தர்மத்தைக் காக்கும் தர்மேஸ்வரரை வழிபடுவோரும், இவ்வாலய வளர்ச்சியில் பங்கு கொள்வோரும் வாழ்வில் தாங்கள் இழந்த அனைத்து செல்வங்களையும் மீட்பர் என்பது தெய்வப் பிரஷ்ணத்தின் மூலம் அறிய முடிகிறது.
திருமணத் தடை நீக்கி அருளும் ஸ்ரீ அறம் வளர்த்த ஈசனையும், ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியையும் கிராம தேவதையாக இருந்து அருள்புரியும் காவாத்தம்மனையும் கண்டு வழிபட்டு நலமடைவோம்.
தொடர்புக்கு : 97860 58325.


Sunday, September 11, 2016

கடுமையான திருமண தடை நீக்கும் இடையாறு 

பலனளிக்கும் பரிகார தலம் 


அருள்மிகு மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)திருக்கோயில், டி. இடையாறு, திருக்கோயிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. 

நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில்திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.

சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்களுக்கு "கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு' என்பர்.

இத்தலம் அத்தகைய அமைப்பில் உள்ளது.