Sunday, July 31, 2016

3 வினாடிகள் மட்டுமே தரிசனம் தரும் தேவார பாடல்  பெற்ற சிவஸ்தலம் ....


திருமால் வாமன அவதாரம் எடுத்த பொது வணங்கிய தலம் ...இறைவன் திருநாமம் வாமன புரீஸ்வரர் .....இறைவி அஞ்சனாட்சி ......

இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதாக ஐதீகம் ....எனவே தான் எப்போதும் திரைசீலை இட்டே  காணப்படுகிறது ....தீபாராதனையின் பொது 3 வினாடிகளே திறக்கப்படுகிறது ....


காவலுக்காக ஏகாதச ருத்ரர்கள் திரைசீலை வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது ....எனவே திருசீலைக்கு தான் முதல் பூசை ....


இவ்வாலய சிவனை வழிபட குறுமுனி வந்தபோது திரையிடப்பட்டிருந்ததால் கோபமுற்ற அகத்தியர் எதிரில் உள்ள மலையடிவாரத்தில் (ஈசானமூலையில்) சிவனை லிங்கபிரதிஷ்டை செய்து வணங்கினார் .

தற்சமயம் ஆலமரத்தடியில் சிறு கூறையின் கீழ் உள்ளார்.அடியார்கள் அவசியம் காணவேண்டிய தலம்.

இருப்பிடம்:  கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.


அன்பர்கள் இந்த இரு தலங்களையும் வழிபட்டு வாருங்கள்...

படத்தில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம்....



Friday, July 22, 2016

புற்று நோய் போன்ற  கொடும் நோய்கள் தீர்க்கும் அரிய திருக்கோயில் 

அருமருந்துநாயகி உடனுறை கற்கடேஸ்வரர் .....
திருத்துதேவன்குடி 

நண்டு பூசித்த நாயகன், ஆயில்ய நட்சத்திற்கு உரிய தலம். ஐயாவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் அபிமான தலம் .

தற்போதும் நண்டு பூசித்த தடயம் இறைவன் திருமேனியில் உள்ளது ...
அவர் இயற்றிய கங்காஷ்டகம் பெரும் புகழ் பெற்றது ......

இங்கு அடுத்தடுத்து இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன.
தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை தலங்களில் இது 42 ஆவது தலம் 
ஜாதகத்தில் சந்திரனால் தோஷம் உள்ளவர்கள் இங்கு குடிகொண்டிருக்கும் யோக சந்திரனை வழிபட தோஷம் நீங்கும்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

தற்போது நண்டாங் கோயில் என்று அழைக்கப்படுகிறது ......


.பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களே ......

கவலை வேண்டாம் ......
நீங்கள் வணங்க வேண்டிய திருக்கோயில் 

இடையாற்றுமங்கலம் , மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் , வாளாடி வழி, லால்குடி தாலூகா ,திருச்சி 

உத்திரம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய தலம்...திருமண தடை உள்ளவர்கள் அவசியம் வணங்க வேண்டிய திருக்கோயில் .....
திருமணம் நிச்சயமானவுடன் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து நன்றி செலுத்துகிறார்கள்.

குடும்ப ஒற்றுமைக்காகவும் , கால் வலி நிவர்த்தியாகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம் .....

பெற்ற  பிள்ளைகளால் , நிராகரிக்கப்படுகின்ற முதியோர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து மீண்டும் பிள்ளைகளிடம் ஒன்று சேர்கிறார்கள்....

தவ வலிமை மிக்க மாங்கல்ய மகரிஷி வழிபட்ட தலம் இது.....
மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு....
அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகியோருக்கு மாங்கல்ய தாரண பூஜையை நடத்தித் தந்தவர் மாங்கல்ய மகரிஷி. 


இன்றும் திருமண பத்திரிக்கைகளில் கையில் மாலை தாங்கி பறக்கும் தேவதைகளை இருபுறமும் அச்சிடும் வழக்கம் உள்ளது.

இன்றும் சூட்சும வடிவில் இவர் மாங்கல்யேஸ்வரரை வணங்கி வருவதாக ஐதீகம் நிலவுகிறது ...
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்.....

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்பும் பெண்கள் அதற்காக இங்கு வழிபடலாம்.

இத்தனை சிறப்பு மிக்க திருக்கோயிலை நாமும் சென்று வழிபட்டு மாங்கல்யேஸ்வரரின் அருளை பெற்று வருவோம்....


Wednesday, July 20, 2016

சம்புடத்தில் வைத்து எடுத்து வரப்பட்ட சதாசிவன்

அன்னை பார்வதி தேவியால் பராசர முனிவர் ஆலோசனையின் பேரில் கைலாயத்திலிருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமான்...
ஏன்  எதற்காக?

ஒரு சமயம் காரை மாநகர் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் நகரை மாபெரும் வறட்சி தாக்கப்பபோவதை
தன் குறிப்பால் உணர்ந்த முனிவர்கள் , அங்கு வாழும் மக்களை காப்பாற்ற விழைந்தனர் ......

பார்வதி தேவியை கலந்தாலோசித்தனர் .....
பூலோகம் வர விழைந்த அன்னை உமா தேவி தான் பூசித்து வந்த கைலாச பெருமானை ஒரு சம்புடத்தில் இட்டு 
(தூக்கு சட்டி போன்ற ஒரு பாத்திரம்) எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து தவம் இயற்றி வந்தாள் ...
ஈசனின் கருணையால் ஆபத்து நீங்கியது ......

அன்பர்களே இன்றும் காரைக்கால் மாநகரம் வளம் கொழிக்கும் 
தலை நகரமாக விளங்குவதற்கு இப்பெருமானே காரணம்......

அன்பர்களே....திருநள்ளாறு செல்லும் பக்த கோடிகளே ......காரைக்கால் வந்து காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு நேரெதிரே இருக்கும் இத்திருத்தலத்திற்கு வருகை தாருங்கள்...

காரைக்கால் அம்மையாரோடு ,7 அடி உயர பிரம்மாண்டமான கைலாசநாதர் பேரழகு பெருமானை தரிசனம் செய்யுங்கள்.  

5 சிவஸ்தலங்கள் இங்கு அணி செய்கின்றன ஒரு பாடல் பெற்ற தலம் (*பார்வதீஸ்வரர் திருக்கோயில்)உட்பட
.....

இவை அனைத்துமே நகரத்திற்குள்ளேயே அரை கிலோமீட்டர் சுற்றளவிலேயே அமைந்துள்ளது .....

எனவே திருநள்ளாரோடு  திரும்பி விடாமல் காரைக்கால் வந்து எனவே திருநள்ளாரோடு  திரும்பி விடாமல் காரைக்கால் வந்து இங்கு விளங்கும் பஞ்ச சிவஸ்தலங்களையும் வழிபட்டு ஈசன் அருள் பெறுங்கள்......


இப்பெருமான் இங்கு வருவதற்கு காரணமான இரீசிக முனிவர், குசமா முனிவர் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோர் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வணங்கிய திருமேனிகள் இதோ உங்கள் பார்வைக்காக...



பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம்


அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் - 609 113. நாகப்பட்டினம் மாவட்டம்.

தற்போது சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இத்தலத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் கடற்கரை அமைந்துள்ளது.

பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும். 


அம்பாளுக்கு 
பஞ்சாட்ஷர மந்திரத்தின் பொருள்  குறித்து இங்கு ஸ்வாமி குருவாக வீற்றிருந்து  உபதேசித்தபடியால் இங்கு 
 பள்ளியறை கிடையாது ....

இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலம் 1300 வருடங்களுக்கு முன் கிள்ளி வளவனால் கட்டப்பட்டது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.


சீர்காழியிலிருந்து 12 கிலோமீட்டரில் உள்ளது திருமுல்லைவாசல் ......



Tuesday, July 19, 2016

இறை அன்பர்கள், உழவார பணி மன்றத்தினர் கவனத்திற்கு .......


தமிழ் தாத்தா என்று அன்பாக மக்களால் அழைக்கப்படும்  உ .வே. சுவாமிநாத ஐயர் பிறந்த உத்தமதானபுரம் என்னும் கிராமம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் , குடந்தை தஞ்சை சாலையில்  அமைந்துள்ளது 

அங்கு மிக அழகான ஒரு திருக்கோயில் ஒன்றில் சேவை சாதிக்கும் இறைவன் கைலாசநாதரின் எழில் திருமேனி .....

அருகில்  அன்னுக்குடி ,மாலாபுரம் திருக்கோயில்களும் உள்ளது .....

இவை அனைத்துமே மிக பழமை வாய்ந்த , அதிகம் அறியப்படாத திருக்கோயில்கள் ..

பிரதோஷத்திற்கு மட்டுமே சிலர்  கூடுகிறார்கள் ....மற்றபடி பக்தர்கள் வருகை வெகு குறைவு.

இத்தகைய அரிய திருக்கோயில்களை மக்கள் அறியாமையால் இழந்து விட கூடாது என்பதாலேயே 
நான் சென்று தரிசித்து உங்களுக்கும்  தெரியப்படுத்துகிறேன் ...


மறந்து விடாமல் சென்று தரிசனம் செய்யுங்கள்...





Wednesday, July 13, 2016

திருப்புனவாசல் பழமலைநாதர் திருக்கோயில் , புதுக்கோட்டை 

3 முழமும் ஒரே சுற்று ....30 முழமும்  ஒரே சுற்று.......

அன்பர்களே, தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் லிங்கங்களை விட இத்தலத்து லிங்கத்தின் ஆவுடையாரே  மிகப்பெரியது ......82.5 அடி சுற்றளவு கொண்டது .......தஞ்சை பெருவுடையாரின் ஆவுடையார் 60 அடி சுற்றளவு .....

எனவே இப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது ஒருவர் பிடித்து கொள்ள ஒருவர் சுற்றி வந்து 
ணிவிப்பார்கள்.  எனவே தான் 3 முழமும் ஒரே சுற்று 30 முழமும்  ஒரே சுற்று என்னும் பழமொழி வழக்கில் தோன்றியது.

இப்பெருமானின் வஸ்திரம் தனிப்பட்ட முறையில் ஆர்டர் கொடுக்கப்பட்டு நெய்து தரப்படுகிறது.
பக்தர்கள் காணிக்கையாக நெய்து தருகின்றனர் ...

இத்திருக்கோயிலின் சிறப்புகள் வார்த்தைகளில் அடங்காதது .....

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் , இத்தலத்தில் வழிபட்டால் உடன் தோஷம் நிவர்த்தி ஆகும்.
இதனால் திருமண தடை , மழலை பாக்கியம் தடைபடுதல் ஆகியவற்றிக்கு இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். 

முக்கியமாக இத்திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பிரசவ ஆஸ்பத்திரியை கிடையாது என்கின்றனர்.
இங்கு கோயில்  கொண்டுள்ள காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகிவிடுவதாக தெரிவிக்கின்றனர்.

வைகாசி விசாகத்தில் போது சூரிய பூஜை நடைபெறும் இத்தலம் தேவார பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களுள் 7 ஆவதாக விளங்குகிறது ....

புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வந்தடைந்து அங்கிருந்து 42 கிலோ மீட்டரில் திருப்புனவாசல் உள்ளது .
பேருந்து வசதி அடிக்கடி உண்டு.



Thursday, July 7, 2016


வானமே கூரையாக ...விடம் உண்ட கண்டன் .....

விஷமுண்ட நாயகி சமேத விஷமுண்டேஸ்வரர் திருக்கோயில் .....இலுப்பூர் மடப்புரம் கிராமம் ..
திருத்துறைப்பூண்டி தாலூகா .....திருக்கொள்ளிக்காடு அருகில் ...

மஹாலக்ஷ்மி வழிபட்ட திருத்தங்கூர் திருக்கோயிலுக்கும் , திருகொள்ளிக்காட்டிற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ளது ...

சித்தர்கள் , ஞானிகள் , மகான்கள் பலர் வழிபட்டுள்ள இத்தலம் இன்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளது.  கோயில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது ....கூரையில் அம்பாள் , பைரவர், சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காணப்படுகிறது ....

காரைக்கால் அம்மையாரை நினைவு படுத்தும் விதமாக வயதான மூதாட்டி ஒருவர் இத்திருக்கோயிலை 
விளக்கேற்றி சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறார்....

வயதான நிலையிலும் அருகில் உள்ள திருக்குளத்திலிருந்து  நீரெடுத்து வந்து திருமஞ்சனம் செய்வித்து 
இறைவனை வணங்கி வருகிறார்....

தற்போது சிவபீடம்(சிவபீடம் 9443390589)அமைப்பினர் மேற்கூரை அமைத்து வருகின்றனர்....





Wednesday, July 6, 2016

சுகந்த குந்தளாம்பிகை உடனுறை தளிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் பள்ளியக்ரஹாரம், ..தஞ்சை 

தஞ்சை --குடந்தை பிரதான சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பள்ளியக்ரஹாரம் உள்ளது.
சற்று தொலைவிலேயே திருக்கோயில் அமைந்துள்ளது .....மிகவும் சிதிலமடைந்த நிலை..

ஆனால் மிகப்பெரிய கற்றளி ..தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி அவர்களின் மைத்துனர் 
இத்திருக்கோயிலை வடித்துள்ளார் .....

அவருடைய சிலை மூலவருக்கு நேரெதிரே முக மண்டபத்தில் இருக்கிறது ....
கலையம்சம் மிக்க பிரம்மாண்டமான நந்தி நம் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கிறது .
மூலவரின் திருமேனி மீது பாம்பின் உருவம் பொதிந்துள்ளதாக சொல்லிகிறார்கள் ., எனவே இது ராகு கேது தோஷம் நீக்கும் தலமாக அறியப்படுகிறது .....

தற்போது திருப்பணி ஆரம்பிக்கப்பட இருக்கிறது .....
திருக்கோயிலுக்கு நேர் எதிரே உள்ளவர்கள் கோயிலை திறந்து தரிசனம் செய்ய உதவினார்கள் ..






Tuesday, July 5, 2016

சொக்கனுக்கே  சோதனையா...? (கூடலூர் )

அன்பர்களே...நெற்களஞ்சியமாக விளங்கும்  ,தஞ்சை மாவட்டம் ஏராளமான பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய கலை களஞ்சியங்களாக விளங்கும் திருக்கோயில்களை கொண்டுள்ளது ...

அவற்றுள் பல நம் கவனத்திற்கு வருவதே இல்லை ...அநபாய  சோழன் ஆட்சி காலத்தில் ஆயுள் விருத்தி மற்றும் ஐஸ்வர்ய  விருத்திக்காகவும் இத்திருக்கோயில் கட்டப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது ..
இங்கு சஷ்டி அப்த பூர்த்தி , சதாபிஷேகம் செய்து கொண்டால் ஆயுள் விருத்தி மற்றும் ஐஸ்வர்ய விருத்தியும் கூடும்..

தஞ்சை அருகில் உள்ள கூடலூர் எனப்படும் திருத்தலம் தான் அது..  தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில் பள்ளி அக்ரஹாரம் என்ற இடத்திலிருந்து பிரியும் சாலையில், வெண்ணாற்றங்கரை ஓரமாகவே 3 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த கிராமத்தை அடையலாம்.

இங்குள்ள மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தான் அந்த பிரசித்தி பெற்ற தலம் ....அன்னை மீனாக்ஷி பலரது வாழ்க்கையில் புரிந்துள்ள அற்புதங்கள் ஏராளம் .....

முருகப்பெருமானும் இங்கே வரப்ரசாதியாக விளங்குகிறார்... சரி ...கோயிலின் தற்போதைய நிலை என்ன?

அன்பர்களே....மின்சார கட்டணம் கூட கட்ட இயலாத வகையில்...புனரமைக்க வேண்டிய கட்டாயத்தில் திருக்கோயில் இன்று உள்ளது ..இவ்வளவு என்?....2002 முதல் இங்கு 4 தலைமுறைகளாக பணி புரிந்து வரும் சிவாச்சாரியார் குடும்பத்திற்கு சம்பள பாக்கி தரப்படவில்லை ...

பக்தர்கள் வருகையும் மிக குறைவு....என்றாலும் மனம்  தளராமல் அவர்கள் இங்கே இறைபணி செய்து வருகின்றனர்...

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் இத்திருக்கோயில் இருக்கிறது...

விவசாயிகளுக்கும் , நெசவாளர்களுக்கு தருவது போல்  நம் கிராம புறங்களில் உள்ள இத்தகைய திருக்கோயில்களுக்கு அரசு இலவச மின்சாரம் அளித்தால் என்ன?

இத்திருக்கோயிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன ..
ஆனால் அந்த வருமானமும் கோவிலுக்கு தரப்படவில்லை ...
அதனால் கோயில் மிகவும் பழுதடைந்து தன் சோபையை இழந்து காணப்படுகிறது ..
அரசு உடனடியாக தலையிட்டு இத்திருக்கோயிலை புனரமைப்பதுடன் ,  இத்திருக்கோயிலுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குத்தகை பாக்கியை பெற்று தர வேண்டும்...









Monday, July 4, 2016

கேது பகவான் வழிபட்ட கேதீஸ்வரம் 

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ளது .கிறிஸ்து பிறப்பதற்கு முன் 300 இல் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது .....

திருஞான சம்பந்தரால் 300 பாடல்கள் இத்திருக்கோயிலை போற்றி பாடப்பட்டது ..

சிவராத்திரி நன்னாளில் உலகில் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கமாக இருந்தது ..

ஆனால் 2 நூற்றாண்டுகளாக அவ்வாறு வருவதில்லை என்கிறார்கள்.

போர்ச்சுகீசியரால் தரை மட்டமாக்கப்பட்ட இத்திருக்கோயில் பின்னாளில் கட்டப்பட்டது ...

அப்போது மண்ணோடு மண்ணாகி போன மஹா லிங்கேஸ்வரர் திருமேனி , பின்னர் 1950 களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது ...பிருகு முனிவர் வழிபட்ட தலம்.

மாலியவான் என்னும் அசுரன் வணங்கி பெரு பெற்ற தலம் ...அன்னை: கௌரி.






சனி பிரதோஷத்தன்று தரிசித்த திருக்கோயில்-2 

அன்பர்களே மற்றொரு திருக்கோயில் ஆடுதுறை அருகில் உள்ள  மேலமருத்துவக்குடி என்னும் கிராமத்தில் உள்ளது ....சென்ற  இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது ....

ஆனால் சென்ற சனி பிரதோஷத்தன்று 5.30 மணி அளவில் நாங்கள் சென்றிருந்தபோது விளக்கு கூட ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்து இருந்தது .....அருகில் உள்ளவர் உதவியுடன் கதவை திறந்து மூலவரை தரிசனம் செய்தோம் .....

ஒரே ஒரு பெண்மணியை தவிர திருக்கோயிலில் வேறு யாருமே இல்லை ....

அர்ச்சகர் காலையிலேயே (?) வந்து தான் கடமையை முடித்து சென்று விட்டதாக கூறினார்கள் .....

பின்னர் அருகில் உள்ள அம்மன் ஆலய பூசாரி வந்து விளக்கேற்றி , தரிசனம் செய்ய உதவினார்.
இறைவன் உடைய வேதீஸ்வரர் என்னும் பெயருடன் கம்பீரமாக அழகாக தரிசனம் தருகிறார்..

அன்னை மாதுமை நாயகி ....

அன்பர்களே.....குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள் ......
நாம் கொண்டாடாவிட்டால் பின் இறைவன் எங்கணம் விரும்பி எழுந்தருள்வான்? 
அருகில் உள்ள மெய்யன்பர்களே ...இதை கவனத்தில் கொள்ளுங்கள் ....

திருக்கோயில் திருப்பணி செய்யப்படுவதை விட முக்கியமானது , அதன் பின் அது பழைய நிலையை அடைந்து விடாமல் போற்றி பாதுகாப்பதேயாகும் ....


Sunday, July 3, 2016

சனி பிரதோஷத்தன்று தரிசித்த திருக்கோயில்கள் ...

அன்பர்களே ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் மிகப்பழமை வாய்ந்த நம் கிராமங்களில் உள்ள அதிகம் அறியப்படாத திருக்கோயில்களை தரிசிப்பது என் வழக்கம் ....

நான் குடந்தையில் இருப்பதால் நேற்று சனி பிரதோஷத்தின் போது ஆடுதுறை அருகில் உள்ள இரு திருக்கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் திருவருளால் .....

இதோ உங்கள் பார்வைக்கு .....அந்த திருக்கோயில்கள்களுள் ஒன்று ....
குடந்தை ----மயிலாடுதுறை மார்க்கத்தில், 
ஆடுதுறை அருகில் உள்ள மஞ்சமல்லி திருத்தலம் ......நெல் வயல்கள் சூழ்ந்த அழகான கிராமம் ...ஆடுதுறையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ....பேருந்து வசதி அதிகள் இல்லை எனவே சொந்த வாகனங்களில் வருவது சிறந்தது ...

அன்பர்களே ...ஒன்றை சொல்லி ஆக வேண்டும்... இரண்டு கோயில்களிலும் அர்ச்சகர் இல்லை ...பக்தர்களும் இல்லை ....எனவே அர்ச்சகர் வேக வேகமாக பூசைகளை முடித்து விட்டு வேறு கோயிகளுக்கு சென்று விடுகின்றனர்..
மூடியிருந்த கிரில் கதவுகளின் வழியாகத்தான் தரிசனம் செய்தோம் ..அவர்களை சொல்லி புண்ணியமில்லை ...அவர்களுக்கும் வருமானம் வேண்டுமல்லவா?
அற்புதமான திருக்கோயில்....இறைவன் திருநாமம் மந்திரபுரீஸ்வரர் ....அம்பிகை பெரிய நாயகி ...
மூலவர் மிக பிரம்மாண்டமான மூர்த்தி ....மிக்க அழகு ....

அர்ச்சகர் இல்லாததால் ஆலய வரலாறு தெரிந்து கொள்ள முடியவில்லை ....










Friday, July 1, 2016

சீர்காழியின் சிறப்புமிகு திருக்கோயில்கள் 

சிவநேய செல்வர்களே..!  சீர்காழி தலத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது ...மிக பிரம்மாண்டமான திருக்கோயில் .....

அதன் அருகிலேயே M G R சிலை என்று கேட்டு செல்லுங்கள் .....அருகிலேயே காண்பதற்கரிய பொக்கிஷமான அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது ......
பல சிறப்பம்சங்கள் பொதிந்துள்ள இந்த திருக்கோயில் மக்களால் இன்னமும் அறியப்படவில்லை ....

உயர்ந்த பணத்துடன் கூடிய மூலவர் .....மயில் வாகனம் இன்றி  அமர்ந்த நிலையில் உள்ள முருகப்பெருமான் .. இருபுறமும் பாம்புகளுடன் குருபகவான் ..மூலவரின் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் , வாகனமான நந்தியெம்பெருமானுடன் காணப்படுவது .....போன்ற அரிய சிற்பங்கள் இத்திருக்கோயிலின் சிறப்பம்சங்கள் ...

மேலும் முழுவதும் கற்றளியாக திருப்பணி செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்படுகிறது ...

அருகில் உள்ளவர்கள் சாவி வைத்துள்ளார்கள் ...

அன்பர்களே....சீர்காழி செல்பவர்கள் தவறாமல் இத்திருக்கோயிலை தரிசனம் செய்யுங்கள்...
அக்னிபுரீஸ்வரரின் அருளை பெறுங்கள்.....





 நீண்டு   நெடிதுயர்ந்த கோபுரம், வானளாவிய மதில் சுவர்கள் , 

மாட மாளிகைகள், கூட  கோபுரங்கள், நித்திய உத்ஸவங்கள் .....அன்பர்களே.., இப்படியெல்லாம் ஒருகாலத்தில் இருந்தது ....ஆனால் இப்போது இல்லை ...

வெட்ட வெளியில், தலையில் வெட்டுப்பட்ட காயங்களுடன் , மேற்கூரையின்றி  அருள்பாலிக்கிறார் இறைவன் ஆத்மநாதர் ....தலைக்காடு கிராமத்தில் ...

அன்பர்களே இத்தனை இடிபாடுகளிலும் இறை திருமேனிகள் துளியும் சாந்நித்தியம் குறையாமல் கொள்ளை அழகோடு காட்சி தருகின்றனர் .....என்னே இறைவனின் கருணை !!!!!

மூலவர் ஆத்மநாதரின் கம்பீர உருவம் கண்ணை விட்டு அகலவில்லை ....

மூன்று பிரகாரங்களோடு விளங்கிய மிகப்பெரிய கற்றளி ...3  நந்தியெம் பெருமான்கள் இதனை.உறுதி  செயகின்றனர்...
திருக்கோயிலின் நிலை கண்டு பரிதவித்த அருகில் மேல தெருவில் வசிக்கும் திரு சி . சுப்ரமணியன் (9626387767)  அவர்கள் தலைகாடு பெருமானுக்கு மேற்கூரை அமைக்க தலைப்பட்டுள்ளார் ...

இத்திருக்கோயில் தான் பழைய பொலிவை திரும்ப பெறுவது நம் கையில் தான் உள்ளது அன்பர்களே...

சிவபணிக்கு ஒரு செங்கல்லை வழங்கினாலே  நம் பல தலைமுறையினர் பலன் பெறுவர்.  இது திண்ணம் ..

இருப்பிடத்தை சொல்லி விடுகிறேன் : கிராமத்தின் பெயர் : தலைக்காடு ...
நாகை மாவட்டம்.
திருத்துறைப்பூண்டி தாலூகா 
உம்பளச்சேரி வழி ...

இப்பெருமானை தரிசிக்கவும், இவர் தம் திருப்பணியில் பங்கு பெறவும் நீங்கள் விழைந்தால் .
சிவ பீடம் நிறுவனரும் அமைப்பாளருமான  சிவ திரு. சிவ முத்துராமன் அவர்களை கீழ் கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ...
சிவபீடம் 9443390589