Sunday, November 27, 2016

நலிந்த சிவாலயங்களுக்கு உதவுங்கள் !!!!  நலம் பல பெறுங்கள் !!!!!!

அன்பர்களே.......சிவாலய திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் பல தலைமுறையினர் பலன் பெறுவார் ....இது ஆன்றோர்கள் வாக்காகும் .......

ஆயிரம் புது கோயில்களை கட்டுவதை விட, இருக்கின்ற பழமையும் புராதன பெருமையும் வாய்ந்த இத்தகைய திருக்கோயில்களை சீரமைப்பது அஸ்வமேத யாகம் செய்யவதற்கு ஒப்பாகும் .....

இத்தகைய செயற்கரிய செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் நாம் ,நம்மால் முடிந்த பொருளுதவி செய்வது நமது கடமை  அல்லவா?  

அன்பர்களே..... திருக்கோயில்கள் நிறைந்த திருவாரூர் மாநகரம் ...இங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில்  கச்சனம் அருகே ஆப்பரக்குடி கிராமத்தில் மிகவும் சிதிலமடைந்த இந்த சிவாலயத்தை சீர்திருத்தி ,

செப்பனிட முயன்று வருகிறார்கள் ஓம்காரம் இறைபணி மன்றம், நமசிவாயபுர நாதர் அடியார் திருக்கூட்டம் அன்பர்கள் ....
இறைவன் திருநாமம் அருள்மிகு அமிர்தலிங்க சுவாமி

இந்த ஆலயத்தில் அம்பாள் சன்னதி புதிதாக அமைக்கவும், சுவாமி சன்னதி பழுது நீக்கி புதுப்பிக்கவும் திருப்பணி உபயதார்ர்கள் வரவேற்கப்படுகிறார்கள். சிமெண்ட் 70 மூட்டை, மணல் 3 யூனிட், செங்கற்கள் 7000 தேவை. அன்பர்கள் இந்த ஆலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை  உங்களிடம் கோருகிறார்கள். 
அலைபேசி எண்கள் தந்துள்ளேன் .... 

ஓம்காரம் இறைபணி மன்றம்@ 9095265980, 8678900455




Friday, November 25, 2016

திருமண தடை நீக்கும் திருவேள்விக்குடி திருத்தலம் 


திருவேள்விக்குடி.மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்திலிருந்து. 3 கி.மீ. தூரத்தில் உள்ளது .

ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, இங்கு இறைவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.

அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க திருமணஞ்சேரியில் மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு.

தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

இறைவன் மணவாளேஸ்வரர் , இங்கு வந்து வழிபடும்.திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.



Thursday, November 24, 2016

பட்ட துயர் யாவும் பகலவனை கண்ட பனி போல் நீங்கும் பட்டமங்கலம் அபிமுகேஸ்வரர் அருளால் ....

சிக்கலில் வேல் வாங்கி சூரபத்மனை வென்ற முருகப்பெருமான் , தன ப்ரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக 9 இடங்களில் சிவ லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 
அகர கடம்பனூர் , இளம் கடம்பனூர் , கடம்ப வாழ்க்கை ஆழி கடம்பனூர் ,என்பன அவற்றுள் சில .....
இத்திருத்தலங்கள் அனைத்தும் நாகை மாவட்டம் கீவளூர் அருகில் அமைந்துள்ளது ....

இறுதியாக பட்டமங்கம் வந்தார் .....

இங்கு மேற்கு நோக்கிய ஆனந்தவல்லி சமேத அபிமுகேஸ்வர பெருமானை இறுதியாக வணங்கி தோஷம் முழுதும் நீங்கப்பெற்றார் ...

முருகப்பெருமானின் தோஷத்தை நீக்கி அருளிய பெருமானுக்கு நம் பிரச்சனைகளை களைவதா கடினம்?

அன்பர்களே......  இப்பெருமானை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?

தெரிந்தோ தெரியாமலோ நம் முற்பிறவிகளில் , இப்பிறவியிலும் செய்துள்ள பாவ செயல்கள் அடியோடு அகலும்...
செல்வ செழிப்பு ஏற்படும் ...
நாட்பட்ட நோய்கள்  நீங்கும் ....
இன்னும் எவ்வளவோ நன்மைகள் அடையலாம் .....

சிதிலமடைந்த இந்த திருக்கோயிலை கிராம மக்கள் பெரு முயற்சியோடு சீரமைக்க முயற்சித்து வருகிறார்கள் 
அன்பர்களே..... மிகவும் தூர்ந்து விட்ட திருக்கோயில் குளத்தை தங்கள் சொந்த முயற்சியிலேயே , மாற்று இடத்தில் ,கோயிலுக்கு நேரெதிரே அமைந்துள்ளார்கள் ....தற்போது இத்திருக்குளம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது ......

இத்திருப்பணியில் பங்கு பெற , பட்டமங்கலம் கிராம மக்கள் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் ...   சரி .....சிக்கல் திருகோயிலோடு நெருங்கிய தொடர்புடைய இத்திருக்கோயில் எங்குள்ளது ?
இருப்பிடம் :
சிக்கல் அருகே கீவளூர் திருத்தலத்திலிருந்து , தேவூர் செல்லும் வழியில் 2 கிலோ மீட்டரில் பட்டமங்கலம் என்னும் இந்த கிராமம் உள்ளது ....இங்கு புராதனமான காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது ....

அன்பர்களே.....சென்று வழிபடுங்கள் , திருப்பணியில் பங்கு பெறுங்கள் ......அபிமுகேஸ்வர பெருமானின் அருளை பெற்று வாருங்கள் .....

தொடர்புக்கு :

பாவா என்கின்ற திரு P .K . ஜெயபால் நாயுடு 

அலைபேசி எண் : 9786582126





Saturday, November 19, 2016

வேற்காடு மேவிய வேத நாயகன் 

திருவேற்காடு கருமாரி அம்மன்  திருக்கோயிலை  அறியாதவர்கள் இருக்க முடியாது. 
இங்குள்ள தேவார பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்த தலமாகும் ....

திருவேற்காட்டை சுற்றிலும் எட்டு திக்கிலும் இந்திரன் முதலான அஷ்ட திக் பாலகர்கள் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கியுள்ளார்கள்.

இவை திருவேற்காட்டை சுற்றிலும் 5  km க்கு உள்ளாகவே அமைந்துள்ளது.

இத்தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மிகுந்த நற்பலன்களை அளிக்கக்கூடியது.

படத்தில் காண்பது ஈசான்ய பாகத்தில் உள்ள ஈசான்ய லிங்கேஸ்வரர்.
இவர்(நம் உலகம் உய்வதற்காக ) சாலை விரிவாக்கத்தின் போது கிடைக்கப்பெற்றார்.

கோயில் அமைந்துள்ள பகுதி சின்ன கோலடி  என்று வழங்கப்படுகிறது

அரும் பாடு பட்டு அற்புத திருகோவிலை அன்பர்கள் அமைத்துள்ளனர்.

இறைவன் பருத்த திருமேனியை உடைய அழகிய ஒளி பொருந்திய தோற்றம் கொண்டவர்...

கொடுத்து வைத்தவர்கள் சென்று தரிசனம் செய்யுங்கள் 


Tuesday, November 15, 2016

அறியபடாத அபூர்வ ஆலயம்--செங்குன்றம் (சிங்கபெருமாள் கோயில்)ஏரிக்கரை ஏகபந்தீஸ்வரர் திருகோயில் .
பக்தன் ஒருவரை பலகாலம் உசுப்பி தனக்கு கோயில் கட்டி கொண்ட கருணையாளன் ...

சிங்கபெருமாள் கோயில் பிரதான  சாலையிலிருந்து சுமார் அரை km தூரத்தில் உள்ளது இத்தலம்.மிகவும் சக்தி வாய்ந்தது.
இங்கு அவர் குடி கொண்டதே மிகவும் சுவாரஸ்யமான விஷயம் ....
லோகநாதன் என்பவர் செங்குன்றத்தில்(சிங்கப்பெருமாள் கோயில் ) வசித்து வந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் .. பலகாலமாக பூமியில் புதைந்திருந்த லிங்க திருமேனியை லோக நாதன் தனது சிறு வயதில் வணங்கி வந்துள்ளார் .பின்னர் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர் ஏறக்குறைய ஏகபந்தீஸ்வரரை மறந்தே போனார் .ஆனால் இறைவன் அவரை விடவில்லை ..
தனது திருவிளையாடலை துவக்கினார் 

ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல சுமார் 6 மாத காலம் தூங்கவிடாமல் 
உசுப்பி உசுப்பி இறைவன் தனக்கு ஒரு திருகோயில் அமைத்து கொண்டான்.
 பலகாலம் பூமியில் புதைந்திருந்த லிங்கத்திருமேனியை லோகநாதன் வாத்தியார் மற்றும் சிவனேய செல்வர்கள் பலரும், முருகாஸ்ரமம் சிவத்திரு சாந்தானந்த ஸ்வாமிகள் அவைகளின் பெருமுயற்சி மற்றும் பொருளுதவியோடு அற்புதமான் திருகோயிலை அமைந்துள்ளனர்.

இன்று கருவறையில் கம்பீரமாக ஆரோகணித்துள்ளார் ஏரிக்கரை ஏகபந்தீஸ்வரர்.பார்க்க பார்க்க திகட்டாத திருமேனி.


Tuesday, November 8, 2016

வாழ்வில் வளம் சேர்க்கும் ஆலயம் 
உருக்குலைந்த உமையொருபாகன் திருக்கோயில்

வருமானத்திற்கு வழியில்லாத ஆலயங்கள்  என்றால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதுதான் அறநிலையத்துறையின் அலட்சிய மனோபாவமா?

அன்பர்களே  ....கைலாயத்தில் மட்டுமே வளரக்கூடிய அறிய மூலிகையான சிவ கரந்தை என்னும் செடி மண்ணில் இங்கு மட்டுமே வளர்கிறது .....

சிவராத்திரியன்று மூன்றாம் கால பூசையின் போது இது இறைவனுக்கு சாற்றப்படுகிறது ....
நாக தோஷம் நீக்கும் சுந்தர நாயகி சமேத நாகநாத ஸ்வாமியை, சிதிலமடைந்த திருக்கோயிலாக இருந்தாலும் , உள்ளூர் அன்பர்களும் அடியார் பெருமக்களும் பெருமளவில் வழிபடுகின்றனர் ....

ஒருகாலத்தில் வேதம் ஓதும் அந்தணர்கள் நிறைந்த திருமறைச்சேரி (தற்போது மாறச்சேரி ) என்று அழைக்கப்படும் இந்த சிற்றூர் நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் , திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் மணலி  என்னும் இடத்திற்கு அருகில் இத்திருக்கோயில்  அமைந்துள்ளது ....

கிடைத்தற்கரிய இத்திருக்கோயில் மிக சிறந்த ஒரு பரிகார தலமாகும் ...... வாழ்வில் வளம் சேர்க்கும் திருக்கோயிலாகும் ....
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போன்று , அரிய இத்திருக்கோயில்களை
நாம் அறியாமல் விட்டு விடுகிறோம் .....

தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகளை துவக்க அன்பர்கள் சித்தமாய் உள்ளனர்

எனவே அடியார்களும்,சிவ பக்தர்களும், திருப்பணி உபயதாரர்களும் முன்வந்தது    ஆலய திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
*ப.முத்துக்குமரன*்+91 9840063124
*ச.வேதையன்*+91 7708240152

.குறிப்பு : இத்திருக்கோயிலை பற்றி விரிவாக சக்தி விகடன் நாளிதழ் வெளியிட்டுள்ளது 



Wednesday, November 2, 2016

தேனீக்களின் ரீங்கார இசை இனி கேட்குமா ?  அன்பர்களே.....

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்.....
சுபர் மகரிஷி, திருக்கோயில் சாற்றி விட்டதால் , தேனீ வடிவத்தில் வந்து வழிபட்ட தலம் இது .....இவர் வழிபட்ட பெரிய லிங்க திருமேனி மேற்கு நோக்கிய தனி சந்நிதியாக அமைந்துள்ளது ......

அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை இப்போதும் கேட்கலாம்.....

ஆனால் இதெல்லாம் முன்னொரு காலத்தில் என்று கூறும்படி ஆகிவிட்டது ........
திருப்பணி செய்யும்போது இத்தேனடை கலைக்கப்பட்டு விட்டது ...
பல்லாண்டு காலமாக இருந்த இத்தேனடை தேனை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் இங்கு இருந்தது ....மறுபடியும் தேனடை இதே இடத்தில் அமைக்கப்பட்டு விடுமாம் ....

தற்போது இத்தேனடை திருப்பணி என்ற பெயரில் கலைக்கப்பட்டு விட்டது , அதை காண வேண்டும் என்று ஆவலோடு சென்ற எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது ....

திரும்பவும் தேனீக்கள் வருமா? தேனடை அமைக்கப்படுமா ? காதில் தேன் மாறி பொழியும் 
அந்த செய்திக்காக காத்திருக்கிறேன் ...


கொட்டாரம் நெடுங்காடு வழியாக குடந்தை காரைக்கால் மார்க்கத்தில் கொட்டாரம் கூட்டு ரோடிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது