Friday, December 30, 2016


கொரநாட்டு கருப்பூர், குடந்தை.......

ஒருசமயம் காவேரியில் மிதந்து வந்த ஒரு பெட்டியை கிராம மக்கள் கண்டனர். திறந்து பார்த்தபொது மார்பளவே உள்ள ஒருஅம்மன் சிலையை கண்டு அதிசயித்தனர்.
பின்னர் காஞ்சி மகானின் ஆணைகிணங்க இங்குள்ள சுந்தரேஸ்வரர் திருகோயிலில் பெட்டிகாளி பிரதிஷ்டை செய்யப்பட்டாள். அன்று முதல் இப்பகுதியின் காவல் தெய்வமாக பிரசித்திபெற்று விளங்கிவருகிறாள்.
உக்கிரமாக காட்சிஅளித்தாலும் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவள்.
வருடத்திற்கு ஒருமுறைதான் அதுவும் பெட்டியோடுதான் இவள்
ஊர்வலம் காண்கிறாள். அப்போது மிகுந்த உக்கிரத்தோடு காணப்படுவதால் ஒரே ஓட்டமாக எங்கும் நிற்காமல் எடுத்து சென்று
சன்னதியை அடைந்த பின்னரே நிறுத்துகின்றனர்.

வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் பூஜை நடைபெறும் .....அப்போது இவள் தரிசனம் பெறலாம் ...
ராகு கேது தோஷம் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்கள் , இங்கு வந்து வழிபட்டு .பலன்  அடைகிறார்கள்  

மூலவர் இறைவன் சுந்தரேஸ்வரர்.....அன்னை அபிராமி

குடந்தை அருகே சென்னை சாலையில்  2 கிலோமீட்டரில் உள்ளது கொரநாட்டு கருப்பூர் 


















Monday, December 19, 2016

விண்மீன்கள் வழிபட்ட வேதநாயகன் 



தாம்பரத்திலிருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது செர்பனஞ்சேரி. இங்கு சாலை ஓரமாகவே உள்ளது இத்திருகோயில்.
27 நட்சத்திரங்களும் வழிபட்ட வீமீஸ்வரரை திங்கள், ஞாயிறு கிழமைகளில் தீபம் ஏற்றி வில்வதளத்தால் அர்ச்சித்து வழிபட மங்களங்கள் உண்டாகும்.

தூங்கானை மாடக் கோயில் வகையில் காஞ்சிக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் 18-ம் கோயிலாக இத்தலம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் சிவத் தலங்கள் இரண்டும் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவை. வீமீஸ்வரர் ஆறடி உயர லிங்கத் திருமேனியாராகக் கோயில் கொண்டுள்ளார். இடப்பாகத்தில் தேவி ஸ்வர்ணம் பிகை தெற்குநோக்கி அருள்கிறார்.



Saturday, December 17, 2016

குன்றாத இளமை பொலிவிற்கு இலம்பையன்கோட்டூர் 


அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர் 631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.

அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை


பூந்தமல்லியிலிருந்து பேருந்து வசதி உள்ளது ....

தக்கோலம் செல்லும் வழியில் நரசிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் செல்ல வேண்டும் .



Friday, December 9, 2016

சூரியனார்கோயிலில் ஒரு சந்திர தோஷ பரிகார தலம்...........
மக்களால் அறியப்படாத மகத்தான சிவாலயம் 

திருமாந்துறை(சூரியனார்கோயில்) அட்சய நாத சுவாமி திருக்கோயில் , மணலூர் அஞ்சல் 

↝இங்கு வந்து ஸ்ரீ யோகநாயகி சமேத அட்சயநாத ஸ்வாமியை வணங்கிய பின்னரே சூரியனார் கோயில் சென்று வணங்க வேண்டும் என்பது மரபு .
இது இந்த ஆலய வரலாற்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது 

↝சந்திரன் தன் க்ஷய (க்ஷயம் என்றால் குறைதல் என்று பொருள்) ரோகம் தீர வணங்கிய தலம் ...

↝ விருச்சிக ராசி காரர்கள் , ரோகினி நட்சத்திரம் கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் 

↝ காலமா முனிவருக்கும் , நவகிரஹங்களும் க்ஷய ரோகம் நீங்குவதற்காக இங்குள்ள அட்சய தீர்த்தத்தில் நீராடி 
அட்சய நாத ஸ்வாமியை வணங்கி , துயர் நீங்கப்பெற்ற தலம் .

↝  அன்னதோஷத்தால் துன்புறுவோர்கள்  ...அதாவது உண்ண  உணவு இருந்தும் சாப்பிட முடியாமல் துன்புறுவார்கள், வறுமை காரணத்தால் உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் , பெற்றோரை பசியால் 
வாட செய்ததால் ,இறைவனுக்கு படைக்காமல் உண்டதால் ஏற்பட்ட தோஷம் இப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதால் நிவர்த்தியாகும் .....
↝சூரியனுக்கு ஒளி கிரணங்கள் குறைந்தபோது , ஒளி பிரகாசத்தை கொடுத்த தலம் 

↝  இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் அட்சய த்ரிதியை அன்று வணங்குவதால் குபேர சம்பத்து ஏற்படும் .......

↝ அன்று இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 64 பொருட்களால் பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது .
இதை பிரசாதமாக உண்பதன் மூலம் அனைத்து விதமான உடல் குறைகள் நீங்கும் ...

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோயில் ஆடுதுறை அருகே சூரியனார் கோயில் பின்புறம்(அரை கிலோமீட்டர்)  அமைந்துள்ளது ..
மிக சக்தி வாய்ந்த இந்த திருக்கோயில் பக்தர்களால் அதிகம் அறியப்படாமல் உள்ளது மிகவும் வேதனை ...

சூரியனார் கோயில் வரும் பக்தர்கள் முதலில் அட்சயநாத ஸ்வாமியை வணங்க வேண்டும் .....
ஆனால் இந்த திருக்கோயில் அதிகம் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ...
அட்சய திருதியை அன்று மட்டும் திருவிழா காண்கிறது இந்த திருக்கோயில் .....

ஆலய அர்ச்சகர் திரு ராஜு சிவம் .....
அலைபேசி எண் :9994032380