Tuesday, May 31, 2016

புறக்கணிக்கப்படும்  புராதன திருகோயில் --ராமஞ்சேரி 

அன்பர்களே .....ராமஞ்சேரி என்று ஒரு இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் ,பூண்டி தாலூகாவில் உள்ளது ....திருத்தணி செல்பவர்கள் கவனித்திருக்கலாம் ...அங்கு மிக பழமையான திருகோயில் ஒன்று ....மகாவிஷ்ணுவால் வழிபடபெற்றது ...இறைவனை மகாவிஷ்ணு வழிபடும் அபூர்வ திருகோலம் ....மூலவருக்கு பின்புறம் தான் நாம் கருவறையில் காணமுடியும் ....

கருவறையிலேயே மூலவரை மகாவிஷ்ணு வழிபடும் இத்தகைய தோற்றம் மிக அரிது ....
சைவ வைணவ ஒற்றுமைக்கு வழிகாட்டும் இத்தலம் சில ஆண்டுகள் முன்பு நான் சென்றிருந்த போது பிரதோஷ வழிபடு கூட நடைபெறாமல் பூட்டியே காணப்பட்டது ....

எத்தகைய  அற்புதமான் தலங்களை எல்லாம் நாம் இழக்கிறோம் என்று எண்ணும்போது மிக வேதனையாக இருக்கிறது ...
அன்பர்களே...தற்சமயம் இத்திருகோயில் எவ்வாறு உள்ளது ? பூசைகள்  நடைபெறுகிறதா? பக்தர்கள் வருகின்றனரா? என அறிந்து கொள்ள ஆவல் .....திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பர்கள் யாரேனும் உதவினால் மிகவும் நன்றாக இருக்கும் .......

அருகில் உள்ளவர்கள் கோவிலை திறந்து தரிசனம் செய்ய உதவுவார்கள் ...


Monday, May 30, 2016

கொக்கரையான் கோயிலை கண்டாயோ...?

எமதர்மராஜன் தன உதவியாளர்கள் அன்று எடுத்துவந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் .எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற் செயல்களையும் செய்யாவிடினும் ....
ஒருவன் கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான்  எனில் , அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அந்த நொடியில் விலகி சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான் 

இப்படி ஒரு திருகோயிலா? தலமா ?

ஆம் அன்பர்களே ...இருக்கிறது ....
எங்கு உள்ளது ? நம் கொங்கு நாட்டில் தான் .....திருச்செங்கோடு அருகில் ...16 கிலோமீட்டரில் ..
திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.


இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....

திருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது. சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.
இத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.
இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.
"கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பொ¢ய தீபஸ்தம்பம் உள்ளது.
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ தக்ஷ¢ணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம். சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.


Sunday, May 29, 2016

குடும்ப மகிழ்ச்சி கூட்டும்  ரவிகுல மாணிக்கேஸ்வரர் ..
தாதாபுரம் .....விழுப்புரம் மாவட்டம் ..


ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன தம்பியின் நினைவாக அதே கலைநயத்துடன் கட்டிய திருகோயில் ஒன்று இன்று கிராமம் மக்கள் பொக்கிஷம் என பாதுகாக்கப்பட்டு வருகிறது ,,,,

ராஜ ராஜ புறம் என்பதே மருவி இன்று தாதாபுரம் ஆகிவிட்டது ...
திண்டிவனம் வந்தவாசி சாலையில் வெள்ளிமேடு பேட்டை கூட்டு ரோடு என்று கேட்டு இறங்கி இத்திருகோயில்  இருக்குமிடம் அடையலாம் .....

ஷேர் ஆட்டோ வசதி உண்டு ...
தினசரி ஒரு வேளை பூசை நடைபெறுகிறது ....
திண்டிவனத்திலிருந்து 15 கிலோ மீட்டர் 





Saturday, May 28, 2016

நிம்மதி தரும் சன்னதி--தேவூர்  
இறைவர் திருப்பெயர் : தேவபுரீஸ்வரர், தேவகுருநாதர்
இறைவியார் திருப்பெயர் : தேன் மொழியம்மை, மதுரபாஷிணி
தல மரம்  : வெள்வாழை
தீர்த்தம்   : தேவதீர்த்தம்
வழிபட்டோர்  : குருபகவான், இந்திரன், குபேரன், சூரியன், கௌதம முனிவர்.

தல வரலாறு

  • தேவர்கள், வழிபட்டதால், இப்பெயர்.
  • குபேரன் வழிபட்டு, சங்கநிதி, பதுமநிதி பெற்ற தலம்.

சிறப்புகள்

  • கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
  • பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.

இது, கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்கு தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து வலிவலம் செல்லும் நகரப் பேருந்தில் இப்பதிக்குச் செல்லலாம்.



குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் 

இருக்கும் குன்றக்குடி.....சிவகங்கை மாவட்டத்திலுள்ள  மிக புகழ் வாய்ந்த ,திரளான பக்தர்களை ஈர்க்கும் , அதிக வருமானம் பெறுகின்ற திருகோயில்களுள் ஒன்று ...
பிள்ளையார்பட்டி மிக அருகில் உள்ளது ...அடிகளார் பிறந்த தலம் ....குடைவரை வகையை  சேர்ந்த தலம் ...

இவை  அனைவரும் அறிந்ததே ....அனால்  அன்பர்களே ...மனதை வருத்தும் செய்தி ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ...அது என்னவென்றால் ....குடைவரை கோயிலில் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் அம்மைஅப்பனாகிய நம் பெருமானை , நம் தந்தையாகிய இறைவனை, சிவபெருமானை திருகோயில் நிர்வாகமும் சரி பக்தர்களும் சரி வழிபடாமல் புறக்கணிப்பதே யாகும் ...

மிக  நேர்த்தியான பிரம்மாண்டமான மூலவர் ...மிகப்பெரிய பைரவர் சிலை...என இங்கே அதிசியக்க தக்க சிறப்பம்சங்களை அதிகம் பெற்றிருந்தாலும் ...ஒரு விளக்கேற்றவோ , ஒரு வஸ்திரம் அணிவிக்கவோ ...ஏன் ஒரு முழம் பூ அவர் திருமேனி மீது சாற்றவோ கூடவா ஒருவருக்கும் மனதில்லை?

அவர் இல்லாமல் ஏது ஆண்ட சராசரங்கள்?ஏது உலகம்? ஏது நீங்கள் ,நான்? யாரையும் குற்றம் சொல்லவேண்டும் என்பது என் எண்ணமல்ல..

படி ஏறி முருகனை வணங்க செல்லும் பக்தர்கள் முதலில் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனை வழிபட்டு அல்லவா மேலே செல்ல வேண்டும் ? அது தானே மரபு? அது தானே முறை? திருகோயில் நிர்வாகம் இதனை செயல் படுத்தினால் என்ன ? ஒரு வழிகாட்டி பலகை வைக்கலாமே? அர்ச்சகர்களை பணியமர்த்தலாமே ?
என்ன குறைந்து விட போகிறது ?

கலை நயம் மிக்க ஒரு திருகோயில் கண்டுகொள்ள படாமல் விட படலாமா?
அன்பர்களே ,.... என் ஆதங்கத்தை கூறி விட்டேன் ....இனி உங்கள் விருப்பம் .......


Monday, May 23, 2016

சிறுநல்லூர்  சிவன் ....
மதுராந்தகத்திலிருந்து  7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  இந்த கிராமத்தில் ஆவுடையார் புதைந்த நிலையில்  இந்த சிவலிங்க திருமேனி உள்ளது ...

பூசை புனஸ்காரங்கள்  எதுவும் நடைபெற வில்லை..

தொடர்புக்கு திரு முத்துகுமரப்பா-9443056500, திரு குமரன் 9159009921, திரு பிரசன்னா வெங்கடேசன் 9442531607. பேருந்து சென்னை- அணைகட்டு  (88)  செங்கல்பட்டு- கூவத்தூர் நிறுத்தம் சிறுநல்லூர்.  

சதுர பீட ஆவுடையாருடன் காணப்படுகிறார் இறைவன் ...

அருகில் குளம்  காணப்படுகிறது


Friday, May 20, 2016

உத்தாணி  ஐராவதேஸ்வரர் ---பாபநாசம் 

அன்பர்களே  ,

தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அடுத்து உள்ள உத்தாணி பேருந்து நிறுத்ததிலிருந்து நேர் எதிரே  அடர்ந்த ஒரு வன பகுதிக்குள் இத்திருகோயில் அமைந்துள்ளது .....

தற்போது பிளக்ஸ் போர்ட் வைத்துளார்கள்...

பாதுகாக்கப்பட்ட வன பகுதி  என்பதால், அஸ்பெஸ்டாஸ்  கூரை  வேய்ந்த  ஒரு  சிறிய  திருகோயிலில் இறை திருமேனிகள் அருள்புரிகின்றார்கள் .....

இறைவன் மிக பெரிய  அழகிய  திருமேனி ...வைத்த கண் வாங்காமல்  பார்க்கலாம் ...அத்தனை அழகு ....அன்னையும் அப்படியே ...

இங்கு  ஓயா மணி சித்தர் என்பவர் ஜீவசமாதி உள்ளது ....
இவர் இன்றும் இத்திருகோயில் வளாகத்தில் அருவமாக உள்ளார் என்று நம்பப்படுகிறது...பௌர்ணமிதோறும்  இவருக்கு  சிறப்பு வழிபாடுகள்  நடக்கிறது ..

இவரை வணங்குவதால் வாழ்கையில்  அனைத்து  துன்பங்களும் விலகி நிம்மதி பிறக்கிறது ....கஷ்டங்கள்  விலகுவதாக  நம்பிக்கையுடன் இங்கு வரும் பக்தர்கள் நினைக்கிறார்கள் ...

மேலும்  ஐராவதேஸ்வரரை  இங்கு வந்து வழிபடுவதால் திருமண தடை  விலகுகிறது ...தீராத  நோய்கள்  தீர்கின்றன ....

இவர்  இந்திரனின்  யானையான  ஐராவதம் தன் சாபம் நீங்குவதற்காக வணங்கிய  பெருமான் ...

நீங்கள்  சென்று  வணங்க  வேண்டாமா?  இன்னும் என்ன தாமதம் ? உடனே  புறப்படுங்கள்!!...




ஜமீன் கொரட்டூர் ---திருவள்ளூர் மாவட்டம் 

கொரட்டூர் என்ற இடம்  சென்னை -சென்ட்ரல்  மார்கத்தில் உள்ளது ..இது  அதுவல்ல ....

திருவள்ளூர்  மாவட்டம் , திருவள்ளூர்  பூந்தமல்லி சாலையில்  உள்ள சிறிய  கிராமம் ...

இங்கு அதிகம்  அறியபடாத, அழகிய  திருகோயில் தான்  பாலீஸ்வரர் திருகோயில் ...

சிறிய    கோயில் தான் என்றாலும்  இறைவன்  சிறப்பான  பலன்களை  தர வல்லவர் ....

ஒரு  சிவாலயத்திற்கான அனைத்து  சந்நிதிகளும்  சிறப்புற அமைந்துள்ளன இங்கு ...

அமைதியான  சூழ்நிலையில் இருக்கிறது இந்த  திருகோயில் ...

அன்பர்களே ....கோயில்  பூட்டியிருந்தாலும்  அருகில் உள்ளவர்கள்  திறந்து  தரிசனம்  செய்து வைப்பார்கள் ...

எனவே  தயங்காமல்  சென்று  தரிசித்து  வாருங்கள் ....


Wednesday, May 18, 2016

திரு  கொருக்கை--  நாகை 


பலன் தரும்  பரிகார தலம் 


அட்ட  வீரட்டான தலம்  என்று புகழ் பெற்ற   எட்டு  தலங்களில் காம தகன  மூர்த்தியாக இங்கு  சிவபெருமான்  விளங்குகிறார் ...

தீர்த்தவாகு  என்ற  முனிவர்  இறைவனுக்கு திருமஞ்சனம்  செய்ய  கங்கையை வரவழைத்த தலம் இது .....

காமனை  எரித்த தலம் ...
இத்தலத்தை சுற்றியுள்ள  தலங்களும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதாகவே  அமைந்துள்ளது .....

அதில்  ஒன்று விபூதி குட்டை ...காமனை  எரித்ததால் இங்கு மண் விபூதியை போன்று வெண்ணிறமாக  காட்சியளிக்கிறது ....

திருமண  வரம்  வேண்டுவோர்  அம்மனுக்கு புடவை  சாற்றி  நேர்ந்து கொள்கிறார்கள் .....

ஆவுடையாரில்  தாமரை  மலர் உள்ளது .....

அன்பர்களே  நாம் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து அன்பு பாசம் பரிவு கிடைக்கவில்லை எனில் , இங்கு  வந்து காம தகன மூர்த்தியை  வேண்டிக்கொள்ளலாம் ....
இதனால் நாம்  விரும்பும்  நபரிடமிருந்து அன்பு பாசம் ,பிரியம் நமக்கு  கிடைக்கும் ...

மேலும்  பதவி  உயர்வு ,, உடல் பலம் மன பலம் ஆகிய  யாவும்  இங்கு வந்து  இறைவனை வணங்குவதால் கண்டிப்பாக  சித்திக்கும் ..
தீராத  கொடு நோய்  நீங்கும் ....

எங்கு  உள்ளது?

மயிலாடுதுறை --மணல்மேடு ---கொண்டல் மார்கத்தில்  கொருக்கை உள்ளது ....

மிக  பிரம்மாணடமான  திருகோயில் ....அனைவரும்  வணங்க  வேண்டிய  அற்புத  தலம் ...



மாரச்சேரி நாகநாத ஸ்வாமி  திருகோயில்  
திருத்துறைபூண்டி...

திருமறைச்சேரி  என்பது புராண பெயர் ...
ஒரு காலத்தில்  வேதம்  ஓதும் அந்தணர்கள் நிறைந்த ஊராக விளங்கியதாம் ....

இங்கு சீரும் சிறப்புமாக  விளங்கிய நாகநாதஸ்வாமி திருகோயில்  இன்று இடிபாடுகளுடன்  கற்குவியலாக காட்சியளிப்பது காலத்தின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும் ...

இத்தலம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி  செல்லும் வழியில் மணலி என்னும் பேருந்து நிறுத்ததிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளது ...

கருவறையில்  அற்புத  அழகோடு காட்சியளிக்கும் இறைவனை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் ....

அம்பாளும் அழகில் சற்றும் குறைந்தவள் அல்ல ...ஐந்தடி உயரத்தில் பேரழகாக விளங்குகிறாள் .....

என்ன...?  கண்டு களிக்கத்தான்  பக்தர்கள்  வருகை இல்லை ....

விரைவில்  திருப்பணி  துவக்க  கிராம  மக்கள்  மிக ஆவலாக  உள்ளனர் .....

நீங்கள்  எப்போது  சென்று  தரிசிக்க  இருக்கிறீங்கள் ?




Saturday, May 7, 2016

திருஆமாத்தூர்  விழுப்புரம்  

திருஆமாத்தூர்  நம்  கஷ்டங்கள் விலக ,  பிரச்சினைகள் அனைத்தும் தீர மிக சிறந்த  ஒரு பரிகார தலம் ...விழுப்புரம்  மாவட்டத்தில்  உள்ளது ...

பசு  வணங்கியதால்  இப்பெயர். ஆ என்றால்  பசு..இன்றும் பசுவின் குழம்பு பட்ட வடு இறைவன் மேனியில்  உள்ளது ...

எல்லா  திருகோயில்களிலும் இறைவன் சந்நிதியும் அம்மன்  சந்நிதியும் ஒரே கோவிலில் அமைந்திருக்கும் ....
இங்கு இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி தனி கோவிலாகவும் 
அம்மன் சன்னதி மேற்கு நோக்கி தனி கோவிலாகவும் உள்ளது ..

இறைவன் அபிராமேஸ்வரர் சுயம்பு மூர்த்தி ...
 இங்குள்ள வட்டப்பாறை  மிக விசேஷமானது .....
இதன்  முன்னால் அமர்ந்து  கொண்டு தான் ராமனும் சுக்ரீவனும் 
ராவணனை அழிப்பதற்கு , போர் புரிவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தல புராணம்  தெரிவிக்கிறது ......

முன்னர்  ஊர்  பஞ்சாயத் துகள் இந்த  வட்டப்பாறை முன்  தான் நடைபெருமாம்  ....
நீதி , நேர்மை தவறியவர்கள் இப்பெருமானால் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் , யாரும் இதன் முன்னால் போய் சொல்வதற்கு அஞ்சுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடு ...



Thursday, May 5, 2016

நிதி  பற்றாக்குறையால்  நின்று  போன  சிவாலய திருப்பணி 

அன்பர்களே.....பொன்பேத்தி 
மிக வித்யாசமான  பெயர் கொண்ட  இந்த கிராமம் பாபநாசம்  வட்டம் ,தேவார பாடல் பெற்ற  திருபுறம்பியம் அருகில் உள்ளது ..

இதன் அருகில் உள்ள மற்றொரு தலம் சிவராத்திரி தலமான திருவைகாவூர் .....

இங்குள்ள பவானீஸ்வர சுவாமி திருகோயில் குடந்தை ஜோதிமலை இறைபணி மன்றத்தினரால் திருப்பணி ஆரம்பிக்கப்பட்ட ஒரு அற்புத தலமாகும் .....

கருவறையில்  பெருமான்  பத்மபீட ஆவுடையார் மீது அழகாக ஆரோகணித்துள்ளார் 

பெருமான்  கேட்டதை  கேட்ட மாத்திரத்தில் அருள்பவர் என சிலாகித்து சொல்கின்றனர் கிராம மக்கள் ....

இவருக்கு  செய்யப்படும்  அபிஷேகங்கள் காவேரி நதியில் நேராக சென்று  கலந்து  அதை  இன்னமும்  புனித படுத்துகிறது .....
அந்த அளவிற்கு நதியின் கரை ஓரத்திலேயே அமைந்த திருகோயில் 
...

ஆனால்  நிதி பற்றாக்குறையினால் திருகோயில்  இன்னமும்  முடிவுபெறாத  நிலை ......

நந்திஎம்பெருமான்  சிதிலமடைந்துள்ளதால்  கிராம  மக்கள்  தற்போது பிரதோஷ வழிபாட்டில்  கூட  கலந்து  கொள்வதில்லையாம் ....

எனவே அன்பர்களே ....நந்திஎம்பெருமான்  புதிதாக  செய்யப்பட வேண்டும் ...மற்றும்  திருகோயில்  முற்று பெற வேண்டும் ..
சிவாலய  திருப்பணி என்பது  எளிதில்  கிடைக்ககூடிய  பாக்கியமல்ல ...அன்பர்களே  ....

திருகோயிலை  கவனித்து வரும்  அடியார் சகோதரர் திரு குருமூர்த்தி  அவர்களின்  அலைபேசி  எண் தந்துள்ளேன் ...
நீங்கள்  அவரை  தொடர்பு  கொண்டு இத்திருக்கோயில்  தரிசனம் பெறலாம் ....

திருபணியிலும்  பங்கு பெறலாம் ....

GURUMOORTHY : 9585152811

இத்திருகோயிலுக்கு  திருபுறம்பியம் வந்து  நடந்தே  கூட  சென்று  விடலாம் ....கும்பகோணத்திலிருந்து பேருந்து  வசதி உள்ளது .....



Wednesday, May 4, 2016

மிக  பாழடைந்த   நிலையில்  பௌண்டரீகபுரம் திருகோயில்

சௌந்தர்யநாயகி  சமேத  சோமநாத சுவாமி 

அன்பர்களே,

திரைபடங்களில் வரும் பாழடைந்த மாளிகையை போன்று உள்ளே நுழையவே  அச்சம் தரும் விதத்தில் மிக  சிதிலமடைந்த  விதத்தில் உள்ளது  இந்த திருகோயில் ....

செடி கொடிகள் முட்புதர்கள் மண்டி ......எங்கும்  கற்குவியல் ...குப்பை கூளங்கள்  என வேதனை !!!!!!!

ஒரே  ஆறுதல்  கருவறையில்  விளக்கெறிவது மட்டுமே அர்ச்சகர் கைங்கர்யத்தில் ...

அன்பர்களே ...இதிருகோயிலுக்கு  அருகில் பக்கத்திலேயே அமைந்திருக்கும் அம்மன் கோயில்  நன்கு  பராமரிக்கபடுகிறது ...
ஆனால் இத்திருகோயில் புறக்கணிக்கப்பட்டு பல  ஆண்டுகளாக  கிடப்பில்  போடப்பட்டுள்ளது ....திருப்பணி  நிறைவேறவேயில்லை ..

பொது மக்களோ ஊராட்சி நகராட்சி என நிர்வாகங்களோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை ....

இருப்பிடம் :

குடந்தை --காரைக்கால்  சாலையில் உப்பிலியப்பன் கோயில்  தாண்டியதும் வரும் முருக்கன்குடி சாலையில் , முருக்கன்குடி  அடுத்து  உள்ளது ....

பிரதான  சாலையிலிருந்து 11/2 (ஒன்றரை) கிலோமீட்டர்  இடதுபுறம் பிரியும்  சாலையில் பயணிக்க வேண்டும் ....

இது  மிக சிறிய  கிராமம் தான் ...அர்ச்சகர் வீடு அருகிலேயே உள்ளது .....

உழவார  பணி  மன்றத்தினர் கண்ணில்  ஏனோ  இந்த  கோயில்  படவில்லை ....உடனடியாக  திருப்பணி  நிறைவேற்றப்பட வேண்டிய  கட்டாயத்தில்  இத்திருகோயில் உள்ளது .....

அருகிலேயே தண்டம்தோட்டம் ,அம்மன்குடி என பல புராதனமான திருகோயில்கள் உள்ளன ..

ஆலய  அர்ச்சகர் :திரு  சோமநாதன் அலைபேசி :9843025248



Tuesday, May 3, 2016

நாறும் பூநாதா.....நாறும் பூநாதா ......


திருபுடைமருதூர் .......திருநெல்வேலி  மாவட்டம் , அம்பாசமுத்திரம்  அருகில் திருமுக்கூடல் தாமிரபரணி  ஆற்றின்  கரையில் அமைந்த அற்புத திருகோயில் ....
தரிசித்தாலும் ,மனத்தால்  நினைத்தாலும் நம் துன்பங்கள் உடற்பிணிகள் மனபிணிகள், அனைத்தையும் நொடியில் தீர்த்து வைப்பார்  நாரும்பூநாதர் ....

இங்கு சிவன் சாய்வான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்புரியும் சிவபெருமான், தலையில் வெட்டுப்பட்ட கோடரியின் தடம், மார்பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்துடன் காட்சி தருகிறார்.

திருமணத்தடை, புத்திரதோஷம், தீராத பிணிகள், குடும்ப கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கிடவும், குடும்ப ஐஸ்வர்யம் பெறவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வியாபாரம் விருத்தியடையவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம்
அன்பர்களே  இங்கு  ஒருமுறை சென்று தரிசித்தால் பலமுறை செல்ல  ஆவல்  மேலிடுகிறது ......
அத்தனை அற்புதமான கற்றளி ....பிரம்மாண்டமான திருகோயில் ..
குளுகுளு தாமிரபரணி .......அற்புதம் ....

அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், 

திருப்புடைமருதூர் - 

627 426, திருநெல்வேலி மாவட்டம்






Monday, May 2, 2016

அகரம் --கடம்பத்தூர் ---திருவள்ளூர் 
உழவார  பணி  மன்றத்தினர் கவனத்திற்கு :

திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூரிலிருந்து  பேரம்பாக்கம்  செல்லும்  வழியில்  உள்ள ஒரு கிராமம் அகரம் ....

இங்குள்ள  மிகவும் பழுது பட்ட , ஏறக்குறைய  வெட்டவெளியில் வீற்றிருக்கும் பெருமான் இவர் ....

துணைக்கு பிள்ளை(யார்கள்) இருக்க , பல காலமாக இவர் நிலைமை இதுதான் ...
அன்பர்களே  தற்போது  கோயில்  கட்டப்படதா?  கூரையாவது இவருக்கு வேயப்பட்டதா ? என தெரியவில்லை ....

அன்பர்கள்  யாரவது தெரிவித்தால் தேவலை .....


Sunday, May 1, 2016

சித்தம்  கலங்க வைக்கும் சிவபூரணி திருகோயில் 

அன்பர்களே ......,
இப்படிப்பட்ட  திருகோயில்களும்  நம்  நாட்டில்  தான்  உள்ளன . அம்பாள்  மரகதவல்லி  சிலையின் தலை  பகுதியில் மாபெரும் விரிசல் ..
இதுதான்  இப்படி என்றால் , நந்தி பகவானுக்கு தலையே இல்லை ....

மூலவர்  மாணிகேஸ்வரர்  கருவறை முகமண்டபத்தில், முற்றிலும்  இடிந்துள்ளதால் , எதோ தொங்கும் தோட்டம் அமைத்துள்ளது போல் செடி கொடிகள் முளைத்து அவை கீழ் நோக்கி தொங்கிகொண்டிருக்கின்றன ....

கருவறையின் நான்கு  பக்க சுவர்கள்  மட்டும் எதோ சத்தியத்திற்கு கட்டுபட்டார்போல்  சுவாமியை பாதுகாத்து வருகிறது ....
மூலவர்  மிக அழகான பத்ம  பீடத்தின் மீது அமர்ந்த திருமேனி ...
கம்பீரமான உருவம் ...

அன்பர்களே...இதுதான்  இன்றைய  சிவபூரணி திருகோயில் நிலை ...

எங்குள்ளது..?

குடந்தை -- திருபனந்தாள்  வட்டத்தில் , திருலோக்கி எனப்படும் அற்புத  தேவார பாடல்  பெற்ற தலத்தின் அருகாமையில் உள்ளது  சிவபூரணி என்ற  இந்த  கிராமம் .....

மகாலிங்கம் என்பவர் கோயில்  மெய்காப்பாளர் ....இவர் கோயில் பின்புறம் ஒரு வீட்டில்  வசிக்கிறார் ....இவர் முன்னாள் அண்ணா  திராவிட 
முன்னேற்ற கழக பேச்சாளர் ...
தற்போது  சிவபெருமானின் அடியவர்களில் ஒருவர்..

இவரை  தொடர்பு  கொண்டு எப்போதும்  திருகோயிலை தரிசிக்கலாம் ..

ஐந்து  தலை  நாகம் ஒன்று இப்பெருமானை வழிபடுவதாக இவர் கூறுகிறார் .... தற்போதும் அது  அங்கு தான்  மறைவாக  உள்ளதென்றும் கூறுகிறார் ...

பிரதோஷம்  மட்டுமே  தற்போது  நடைபெறுகிறது ....

contact no:  994 376 4463