Sunday, May 20, 2018

கலியுக துயரங்கள் தீர்க்கும் கருணாமூர்த்தி .....

திருவள்ளூர் மாவட்டம் இருளஞ்சேரி கிராமத்தில் அருள்புரியும் தாயினும் நல்லாள் சமேத கலிங்கநாதேஸ்வரர் திருக்கோயில் சுமார் 1200  ஆண்டுகள் பழமை வாய்ந்தது 
 கலியஞ்சிஸ்வரர் என்பதே மருவி கலிங்கநாதேஸ்வரர் என வழங்கப்படுகிறார் ..

தெரிந்தோ தெரியாமலோ இக்கலியுகத்தில் நாம் செய்கின்ற அனைத்து பாவங்கள் , அதனால் நாம் அனுபவிக்கும் 
துயரங்கள் , அச்சங்கள் நீக்கி அருள் புரிவதால் இப்பெயர் பெற்றார் பெருமான் .....

பெற்ற தாயினும் தயை புரியும் அன்னைக்கும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் தாயினும் நல்லாள் எனும் திருநாமம்.
இறைவன் பச்சை நிற கல்லினால் ஆனவர்.....பச்சை பசேல் என விளங்கும் வயல்களுக்கு நடுவில்சிறிய திருக்கோயில் ஒன்றில்  வீற்றிருக்கிறார் ..

எதிரே மிக பிரம்மாண்டமாக சங்கு தீர்த்தம் அமைந்துள்ளது ....கால வெள்ளத்தில் சிதைவுற்று குறுகியுள்ளது 
இத்திருக்குளத்தை மீட்டெடுக்க வேண்டியது நம் கடமை ....
தினம் ஒரு கால பூசை மட்டுமே நடைபெறும் இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவு.
பிரதோஷ நேரத்தில் மட்டுமே கிராம மக்கள் வழிபட வருகின்றனர் ....

சிறந்த பரிகாரத்தலமான இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது ....
கல்வெட்டுகள் மூலம் இத்தகவல் நமக்கு தெரியவருகிறது 
மக்களால் அறியப்படாத மாபெரும் பொக்கிஷமான இத்திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் 
பேரம்பாக்கம் என்னும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் 
அமைந்துள்ளது ...பூந்தமல்லி யிலிருந்தும் , ரயில் மார்க்கமாக கடம்பத்தூரிலிருந்தும் வசதியாக சென்று வரலாம் .
இத்திருக்கோயிலுக்கு மிக அருகிலேயே தேவார பாடல் பெற்ற தீண்டா திருமேனியரான கூவம் திரிபுராந்தக ஈஸ்வரர் திருக்கோயில் .....புகழ் பெற்ற  நரசிங்கபுரம் நரசிம்மர் திருக்கோயில் மற்றும் நரம்பு 
சம்பந்த பட்ட நோய்கள் நீக்கும் பேரம்பாக்கம் சோழீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் அமைந்துள்ளன 

திருக்கோயில் அர்ச்சகர் திரு கோபிநாத் 

அலைபேசி எண்: 7094936627
அன்பர்களே.....கலியுகத்தில் நாம் அனுபவிக்கும் துயர்கள் நீங்கி மன அமைதி பெற அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இருளஞ்சேரி என்றால் அது மிகையல்ல .....

குறிப்பு:   அர்ச்சகரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பின் தரிசனம் செய்யலாம்.





No comments:

Post a Comment